மூன்றாவது அலை வராமல் இருப்பதற்கு தடுப்பூசி அவசியம்.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ மருத்துவர் எழிலன் அறிவுரை.

Published : May 10, 2021, 01:28 PM IST
மூன்றாவது அலை வராமல் இருப்பதற்கு தடுப்பூசி அவசியம்.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ மருத்துவர் எழிலன் அறிவுரை.

சுருக்கம்

மூன்றாவது அலை வராமல் இருப்பதற்காக கட்டாயம் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மாநகராட்சி ஆணையரிடம் ஆயிரம் விளக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார மையத்தை கோவிட் மையமாக மாற்றுவதற்கு பரிந்துரைகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய குழலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆரம்ப சுகாதார மையங்களில் இருக்கக் கூடிய மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆரம்ப சுகாதார மையங்களில் இட வசதிகள் போதிய அளவு இருந்தால் குறைந்தபட்சம் 10 எண்ணிக்கையில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யலாம் என்ற ஒரு கோரிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையில் வைத்து ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசிகள் காலியாகும் நிலையில் இருந்தால் உடனடியாக அது மருந்து கிடங்கிலிருந்து வரவழைக்கப்படுகிறது.  

தடுப்பூசி போடும் பணியில் எந்த சுனக்கமும் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்தார். மூன்றாவது அலை வராமல் இருப்பதற்காக கட்டாயம் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மாநகராட்சி ஆணையரிடம் ஆயிரம் விளக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார மையத்தை கோவிட் மையமாக மாற்றுவதற்கு பரிந்துரைகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அதனை தொடர்ந்து சூளைமேடு, டிரஸ்ட்புரம், தேனாம்பேட்டை, அயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!