2 மணி நேரமாக நீடிக்கும் போட்டி... அதிமுக அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு... பரப்பு வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published May 10, 2021, 1:10 PM IST
Highlights

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றிய திமுக வெற்றிகரமாக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்காலிக சபாநயகராக கு.பிச்சாண்டி, அவை முன்னவராக துரைமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அதிமுகவைப் பொறுத்தவரை 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் என இருதலைகள் உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது. கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 2 மணி நேரமாக நடந்து வரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நீடித்து வருகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான அதிரப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ... 

அதிமுக அலுவலகத்திற்கு வெளியே திடீரென குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர். pic.twitter.com/rcnjzxRnMX

— Sivashankar (@Mr_Sivashankar)

 

 

click me!