
முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகண்டில், சட்டசபை தேர்தல் வரும் 14ல் ஒரே கட்டமாக நடக்கிறது. அதனால் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன. உத்தரபிரதேசத்தைவிட, உத்தரகாண்டில்தான் காங்கிரஸ் பாஜகவுக்கு நேரடி போட்டி தரும் என்று சொல்கிறார்கள்.
உபியில் அகிலேஷ் வேகம் எடுத்துவிடவும், அங்கு காங்கிரஸால் முன்னேற முடியவில்லை. அதனால் பாஜகவுக்கு இணையான ஆதரவு உள்ள உத்தரகாண்ட்டிலேயே தன்னுடைய பிரச்சாரத்தையும் அதிகப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பதால் கட்சித் தாவல்கள் சரளமாக நடந்து கொண்டிருக்கின்றன.
நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் பேசியதாவது, ‘இந்த 10 ஆண்டுகள் உத்தரகண்ட் மாநிலத்திற்கானது. இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. சமீபத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இங்கு துவக்கி வைக்கப்பட்டன. 60 ஆயிரம் கோடி ரூபாய்பா.ஜ., ஆட்சியில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை பலப்படுத்தி உள்ளோம். ஏழைகளுக்காக, 80 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. குடிநீர் திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் வளர்ச்சி தொடர, மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி தொடர வேண்டும். இடையூறுமாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு, மக்கள் ஓட்டு போடக் கூடாது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால், கமிஷன் இன்றி எந்த பணியும் செய்ய மாட்டார்கள். மக்களைப் பிரித்து, பொது சொத்தை கொள்ளையடிப்பது தான் அவர்களின் ஒரே நோக்கம்’ என்று பேசினார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பதவியேற்புக்குப் பிறகு புதிய பாஜக அரசு, மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் வரைவைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை அமைக்கும். திருமணங்கள், விவாகரத்து, நிலம் - சொத்து மற்றும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான சட்டங்களை வழங்கும்’ என்று கூறியிருக்கிறார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.