விஜய் அரசியல் என்பது ஒரு நாடகம்.. ஆட்சியை பிடிக்க அல்ல, அரசியல்வாதிகளை மிரட்ட.? பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்

Published : Feb 12, 2022, 10:38 AM IST
விஜய் அரசியல் என்பது ஒரு நாடகம்.. ஆட்சியை பிடிக்க அல்ல, அரசியல்வாதிகளை மிரட்ட.? பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்

சுருக்கம்

ரஜினி எப்படி போர் வரப்போகிறது, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என நிழல் யுத்தம் நடத்தினாரோ அதுபோல இப்போது விஜய் நடத்த ஆரம்பித்திருக்கிறார். புஷி ஆனந்த் சொல்வதையெல்லாம் விஜயின் வார்த்தையாக எடுத்துக்கொள்ள முடியாது, பெற்ற தாய் தந்தையரே தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் வழக்கு தொடுக்கிறார் என்றால், யாரோ ஒரு புஷி ஆனந்த் சொல்வதுதான் விஜயின் மனசாட்சி என்று எடுத்துக்கொள்ள முடியுமா.? 

ரஜினியைப் போலவே நடிகர் விஜயும்  நிழல் யுத்தம் நடத்த ஆரம்பித்துவிட்டார், இது வெறும் நாடகம், விஜய் அரசியல் என்பது ஆட்சியைப் பிடிக்க அல்ல அரசியல்வாதிகளின் மிரட்டவே என மூத்த ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். 

சினிமாவில் தனக்கு உள்ள மார்க்கெட் குறையும் வரை அவர் வெளிப்படையாக அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் நகராட்சி மன்ற தேர்தலில் களம் காண உள்ள நிலையிலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்யை அவரது இல்லத்தில் ஒருமணிநேரம் சந்தித்து பேசியுள்ள நிலையிலும் சவுக்கு சங்கர் இவ்வாறு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சுதந்திர காலம் தொட்டே சினிமாவும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் இரு நேர்கோடுகளாக  இருந்து வருகின்றன. ஆயிரம் மேடை பிரச்சாரங்களுக்கு ஒரு சினிமா படம் சமம் என்பதுதான் அதற்கு காரணம், சினிமா என்ற ஊடகத்தை அரசியலுக்காக சரியாக பயண்படுத்தியது திராவிட கழகங்கள்தான் என்றால் மிகையல்ல. திராவிட அரசியலில்தான் ஒவ்வொரு திரைப்படத்திலும் திரைக்கதை, வசனம், பாடல்கள் மூலம் அரசியல் தலைவர்கள் மக்களிடம் நேரடி தொடர்பில் இருந்தனர்.

திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொள்கை அரசியல் தூவப்பட்டன. திரைக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களை காட்டிலும் திரையில் தோன்றுபவர்களை மக்களால் கொண்டாடப்பட்டனர். அதனை சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர்களில் ஒருவர்தான் நடிகர் திலகம் எம்ஜிஆர் ஆவர். அவர் அன்று விதைத்த விதை தான் இன்று திரைத்துறையில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் முதல்வராகும் கனவுக்கு அச்சாரம் என்று சொன்னால் மிகையல்ல, 

எம்ஜிஆரின் உச்ச நட்சத்திர வெற்றிடத்தை ரஜினி நிரப்பினார். அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா எனப் பல குழப்பங்களுடன் பல ஆண்டுகள் உருண்டோடின, தனது திரைப்படங்கள் வியாபாரமாவதற்கே அவர் அரசியல் பிரவேசம் என்ற நாடகத்தை கையில் எடுத்ததார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.  பல பத்தாண்டுகள் அரசியலுக்கு ரஜினி இதோ வரப்போகிறார், அதோ வரப்போகிறார் என நிலவி வந்த பிம்பம்  ஒருகட்டத்தில் உடைந்தது. அரசியலுக்கு வரவே போவதில்லை என அவரே வாக்குமூலம் கொடுத்தும் ஒதுங்கிவிட்டார். இப்போது அதே போன்ற ஒரு நிலைக்கு வந்திருக்கிறார் இளைய தளபதி விஜய். தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரத்தில் இருப்பவர் விஜய் தான். இவரும் ரஜினியைப் போலவே விஜய் மக்கள் இயக்கம் என்ற மன்றத்தை ஆரம்பித்து இலை மறை காயாக, பட்டும் படாமல் அரசியல் செய்து வருகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கி கணிசமான வெற்றியைப் பெற்றனர்.

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். ஆனால் இதில் எழும் கேள்வி என்னவென்றால், இன்னும் கூட விஜய் ஏன் வெளிப்படையாக, அரசியல் இயக்கமாக ஒரு பதிவு செய்த அரசியல் கட்சியாக முன்வர தயங்குகிறார் என்பது தான். இது தமிழக மக்களிடம் மட்டுமல்ல அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழும் குழப்பமாகவும், சந்தேக கேள்வியாகவும் உள்ளது. விஜயின் இந்த அரசியல் போக்கை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்  ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ரஜினியைப் போலவே விஜய்யும் நிழல் யுத்தம் தொடங்கிவிட்டார். அவரின் அரசியல் என்பது முழுக்க முழுக்க நாடகம் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:- பல தமிழ் கதாநாயகர்கள் எம்ஜிஆரை போல தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால் எம்ஜிஆர் என்பவர் தனித்துவமானவர். எவரிடமும் ஒப்பிட முடியாதவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என பேச்சுகள் வந்தபோது ஊடகங்கள் அதைக்குறித்து பலவிதமான யூகச் செய்திகளை வெளியிட்டன. ஆனால் இப்போது அது அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கிறது.  இப்போது ஊடகங்கள் கையில் எடுத்துள்ள கதாநாயகர்தான், இப்போது நடிகர் விஜய்யின் அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளதற்கு காரணம் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்தான். நடிகர் விஜயின் தற்போதைய சூழல்களை வைத்து அவர் அரசியலுக்கு வந்துவிட்டார், வரப்போகிறார் என்றெல்லாம் கூறமுடியாது. அவர் வெளிப்படையாக கட்சியின் பெயரை பதிவு செய்து, எனது ரசிகர்களான விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு தாருங்கள் என வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் பட்சத்தில் அதை நம்பலாம்.

அதுவரை இது ஒரு நிழல் யுத்தமாகவே இருக்கும். ரஜினி எப்படி போர் வரப்போகிறது, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என நிழல் யுத்தம் நடத்தினாரோ அதுபோல இப்போது விஜய் நடத்த ஆரம்பித்திருக்கிறார். புஷி ஆனந்த் சொல்வதையெல்லாம் விஜயின் வார்த்தையாக எடுத்துக்கொள்ள முடியாது, பெற்ற தாய் தந்தையரே தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் வழக்கு தொடுக்கிறார் என்றால், யாரோ ஒரு புஷி ஆனந்த் சொல்வதுதான் விஜயின் மனசாட்சி என்று எடுத்துக்கொள்ள முடியுமா.?  இந்த இலை மறை காய், பட்டும் படாத அரசியல் அவரின் ரிட்டையர்மென்ட் பிளான் என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவர் உடனடியாக அரசியலுக்கு வரமாட்டார் என்று ஏன் கூறுகிறேன் என்றால், இப்போது இருக்கிற நடிகர்களில் விஜய் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.  இப்போது அவரது வியாபாரம் 200 முதல் 250 கோடி ரூபாய் இருக்கிறது. இவ்வளவு பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவாரா என்றால் வரமாட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

100% அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்,  ஓரளவிற்கு அவருக்கு மார்க்கெட் குறையும் போது அவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அடுத்த எட்டு முதல் 10 ஆண்டுகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை, இப்போது அவர் செய்வதெல்லாம் வெறும் நாடகம், நிழல் அரசியல், அவரின் இந்த அரசியல் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அல்ல அரசியல்வாதிகளை மிரட்டுவதற்கு, ஆட்சியில் இருப்பவர்கள் எந்த வகையிலும் தனக்கு எதிராக செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காக. தனது பின்னாலும் மக்கள் இருக்கிறார்கள், தனக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக. எனது சவுக்கு சங்கர் கூறியுள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!