புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவோரே உஷார்..!! இதை மட்டும் உடனே செய்யுங்க..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2020, 10:31 AM IST
Highlights

வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு மற்றும் கடவுச் சொல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில வேலை அளிப்பவர்கள் இதனை சரிவர பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது.
 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்யாத தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  மாநிலங்களுக்கு  இடையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1969 இன் படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் அனைத்து வேலை அளிப்பவரும் பணியமர்த்தப்பட்ட புலம்பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் பதிவு செய்யவேண்டும். 

தமிழக அரசால் இதற்கென பிரத்தியேகமான வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு மற்றும் கடவுச் சொல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில வேலை அளிப்பவர்கள் இதனை சரிவர பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது. 

எனவே உடனடியாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை மேற்படி வலைதளத்தில் எவ்வித விடுதலும் இன்றி பதிவுசெய்ய அறிவுறுத்தப்படுகிறது இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

click me!