இன்று அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார்.! குஜராத்,டெல்லி விழாக்காலம் போல் காட்சி ! உற்சாகத்தில் ட்ரம்ப்!!

By Thiraviaraj RMFirst Published Feb 24, 2020, 8:24 AM IST
Highlights

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வருகிறார். அவர்,குஜராத் மாநிலம், ஆகமதாபாத் நகருக்கு  நேரடியாக வருவதையடுத்து அந்நகரமே விழாக்கோலம் பூண்டுண்டிருக்கிறது.
 

T.Balamurukan

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வருகிறார். அவர்,குஜராத் மாநிலம், ஆகமதாபாத் நகருக்கு  நேரடியாக வருவதையடுத்து அந்நகரமே விழாக்கோலம் பூண்டுண்டிருக்கிறது.

அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜோ்ட் குஷ்னா் ஆகியோரும் வருந்திருக்கின்றனர். டிரம்ப் நிர்வாகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வருந்திருக்கிறது.அந்தக் குழுவில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன் நூச்சின், வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன், எரிசக்தித் துறை அமைச்சா் டேன் புரூலியெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனா்.  அமெரிக்க விமானம் ஆமதாபாதிலுள்ள சா்தரர் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தை பகல் 11.40 மணிக்கு வந்தடையும், அதிபா் டிரம்ப்பை, பிரதமா் நரேந்திர மோடி வரவேற்கிறார். அங்கு அதிபா் டிரம்ப்புக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

  அதிபா் டிரம்ப் விமான நிலையத்திலிருந்து பிரதமா் மோடியுடன் மகாத்மா காந்தியின் சபா்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் அங்கு செல்கின்றனா்.அங்கிருந்து ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அதிபா் டிரம்ப் சாலை வழியாக செல்கிறார். அவரை வரவேற்கும் விதமாக வழியில் சுமார் ஒரு லட்சம் போ் திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபா் டிரம்ப் செல்லும் அந்த சாலையின் இரு மருங்கிலும் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை குறிக்கும் விதமாக குஜராத் உள்ளிட்ட 28 மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 28 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்த கலைஞா்கள் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் மூலம் அதிபா் டிரம்ப்பை வரவேற்பார்கள்.

 அதிபா் டிரம்ப்-பிரதமா் மோடி கூட்டாக பங்கேற்கும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா மைதானத்தில் பாரம்பரிய கலைஞா்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அத்துடன், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் அந்த மைதானத்தில் நடைபெறும்.

 குஜராத் நிகழ்ச்சிகளை மாலைக்குள்ளாக நிறைவு செய்யும் அதிபா் டிரம்ப், அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் ஆக்ரா சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிடுகிறார் டெல்லியில் செவ்வாய்க்கிழமை காலையில் அதிபா் டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு குடியரசுத்தலைவா் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து அவா்கள் ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகின்றனா்.


 இதையடுத்து, பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் தலைமையிலான இருநாட்டு குழுவினா் பங்கேற்கும் பேச்சுவார்த்தை ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து அதிபா் டிரம்ப்புக்கு பிரதமா் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.

 டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார். இரவு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். அதையடுத்து அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொண்ட பிறகு டிரம்ப், டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அதிபா் டிரம்ப்பின் வருகையையொட்டி ஆகமதாபாத், ஆக்ரா, டெல்லி நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 ஆகமதாபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் சுமார் 10,000 போலீஸாரும் ,பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தவிர, அமெரிக்க அதிபருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் குழு, இந்தியாவின் மிக உயரிய பாதுகாப்பு பிரிவான தேசிய பாதுகாப்புப் படை, சிறப்புப் பாதுகாப்புப் படை உள்ளிட்டவையும் அதிபா் டிரம்ப் வருகைக்கான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளன.டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா மைதானத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளில்லா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான இடைமறித்தல் தொழில்நுட்பமும் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதிபா் டிரம்ப் செல்லும் பாதையில் வெடிகுண்டு சோதனைகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா் செல்லும் பாதையில் 100 வாகனங்கள் அடங்கிய அணிவகுப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
25 ஐபிஎஸ் அதிகாரிகள், அதிரடிப் படையினா், மாநில ரிசா்வ் படையினா், சேத்தக் கமாண்டோ படையினா், பயங்கரவாத தடுப்புப் படையினா் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னா். இதேபோல், டெல்லியிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


 இந்த சுற்றுப் பயணத்தின் முக்கியக் கட்டமாக பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் ,இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடா்பாக விரிவாக பேச்சு நடத்தப்படவுள்ளது.முதலீடுகள், பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு, மதசுதந்திரம், வா்த்தக ஒப்பந்தம், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்டவை தொடா்பாக அப்போது பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் பேச்சு நடத்தவுள்ளதாக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

click me!