ஜெ.முதலவராக திருப்பம் தந்த கடலூர் மாநாடு!

By Thiraviaraj RMFirst Published Feb 24, 2020, 7:30 AM IST
Highlights

1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகர் கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாடு தான் ஜெவுக்கு அரசியலில் திருப்பத்தை கொடுத்து,தமிழக முதல்வராக்கியது. 

T.Balamurukan

1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகர் கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாடு தான் ஜெவுக்கு அரசியலில் திருப்பத்தை கொடுத்து,தமிழக முதல்வராக்கியது. 


 கடலூரில்  நடைபெற்ற மகளிர் மாநாட்டில், "ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்ற பேச்சே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்விற்கு முக்கியத் திருப்பமாக அமைந்தது.1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகர் கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.

 திருவனந்திபுரத்திலிருந்து தொடங்கிய பேரணி கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிந்தது. அதே இடத்தில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அதிமுக உறுப்பினராக ஜெயலலிதா சேர்ந்தார். மாநாட்டில் பலரும் உரையாற்றினர். அப்போது அங்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பேசிவிட்டாரா? எனக் கேட்டார். இல்லையென்றதும் அவரை பேசுமாறு அழைத்தார்.  

கடலூர் மாநாட்டில் ஜெயலலிதா பேசும் போது, 'ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் இயங்குவேன் என்று பேசினார். அன்று தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் மேடைப்பேச்சு, தமிழகத்தில் ஆட்சிபுரியும் அளவுக்கு அவரை உயர்த்தியது.2014ஆம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலின்போது கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அப்போது, எனது அரசியல் பயணமும், கடலூரில்தான் தொடங்கியது' என அந்த கூட்டத்தில் பேசி நினைவு கூர்ந்தார் ஜெ.

தமிழக அரசியலில் உச்சம் தொட்ட ஜெயலலிதாவின் வாழ்வில் கடலூர் மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என ஜெயலலிதாவே தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம் குறித்து சுட்டிக்காட்டியதை 

click me!