திமுகவில் ராஜகண்ணப்பன்; கடுப்பில் யாதவர்கள்; கோபத்தின் உச்சகட்டத்தில் அதிமுக; அடுத்த ஐடி ரெய்டு தயார்!

By Thiraviaraj RMFirst Published Feb 24, 2020, 12:23 AM IST
Highlights

யாதவ சமுதாய மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்கிற மாயயை காட்டி திமுகவில் தன்னை ஐக்கியமாக்கியிருக்கிறார் ராஜகண்ணப்பன் என்கிற குற்றச்சாட்டு அவர் சார்ந்த சமுதாயத்திற்குள் இருந்தே ஒலிக்கத்தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை ஐக்கியமாக்கியிருக்கிறார்.
 

T.Balamurukan
யாதவ சமுதாய மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்கிற மாயயை காட்டி திமுகவில் தன்னை ஐக்கியமாக்கியிருக்கிறார் ராஜகண்ணப்பன் என்கிற குற்றச்சாட்டு அவர் சார்ந்த சமுதாயத்திற்குள் இருந்தே ஒலிக்கத்தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை ஐக்கியமாக்கியிருக்கிறார்.

மதுரை ஒத்தக்கடையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
1991-1996 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார்.  அக்கட்சியில் இருந்து விலகி 2000-ம் ஆண்டில் மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்து, இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ராஜ கண்ணப்பன், 2009-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ப.சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். அதன்பின் 2011-ம் ஆண்டு திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.அதில் திமுக மா.செ பெரிய கருப்பணிடம் தோற்றுப்போனார்.இப்படி தொடர் தோல்விகளால் கட்சியில் அவருக்கென்று இருந்த முக்கியத்துவம் குறைந்தது.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்தம் அணியில் சேர்ந்தார்.பிறகு ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்த போது, கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர், உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். நடந்து முடிந்த எம்.பி தேர்தல் அலையில் திமுகவினர் வெற்றி பெற்றனர். 'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக' கண்ணப்பனுக்கு மவுஸ் திமுகவில் கூடியது.

சமீபத்தில் செய்தியாளரைச் சந்தித்த ராஜ கண்ணப்பன், 'எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்த சரியான தலைவர் மு.க.ஸ்டாலின்தான். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரு வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவோம்'' என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இருக்கும் யாதவர்களை அழைத்துவர பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தொகுதி வாரியாக பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்ட போட்ட திட்டம் நிறைவேறாமலும், ஸ்டாலினிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமலும் போனதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம்' ராஜகண்ணப்பன்.

இது ஒரு புறம் இருக்க, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தியது போல் கண்ணப்பனுக்கும் ரெய்டு நடத்தி அவருக்கு இருக்கும் இமேஸை டெமேஸ் செய்யதுவிட்டால் மக்கள் மத்தியில் இருக்கும் பேரும் போய்விடும். அதே நேரத்தில் வழக்கு போட்டு வரக்கூடிய தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடவிடாமல் தடுத்து விடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறதாம் அதிமுக.  

click me!