Sasikala : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... சசிகலா ஆதரவு யாருக்கு..? விஸ்வரூப டி.டி.வி.தினகரன்..!

By Thiraviaraj RMFirst Published Dec 19, 2021, 10:35 AM IST
Highlights

சசிகலாவின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், டி.டி.வி. தினகரன் உற்சாகமாக சில காய்களை நகர்த்தி வருகிறாராம்.

நகர்ப்புற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தி.மு.க. குறி வைத்து வரும் நிலையில், ‘இந்தியாவின் முதன் முறையாக’ என்ற ஊழலில் அ.தி.மு.க. மாஜிக்கள் சிக்கி வரும் நிலையில், சசிகலாவின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், டி.டி.வி. தினகரன் உற்சாகமாக சில காய்களை நகர்த்தி வருகிறாராம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து அ.தி.மு.க.வில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளிடம் பேசினோம். ‘‘சார்... எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்டு உருவாக்கி, ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்து, ஆட்சி கலையும் நிலையில், மீண்டும் ஆட்சியை நிறுவிவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா. ஆனால், அதன் பிறகு நடந்த காட்சிகள் அனைவருக்கும் தெரியும்.

ஏறிய ஏணிப்படியையே எட்டி உதைத்து விட்டு, இன்றைக்கு அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை பங்கு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும். இதனை உண்மையான தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் மாஜிக்கள் ரெய்டுகளில் சிக்கி வருகின்றனர்.

மேலும், கைதுக்கு பயந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. தி.மு.க. இன்றைக்கு தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. அ.தி.மு.க.வில் இருப்பவர்களை எடப்பாடியாரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவராக தி.மு.க.விற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம், அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும்-. அதுவும் சசிகலா போன்று மன தைரியமும் படைத்தவர்களால்தான் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எஃகு கோட்டையாக மாற்ற முடியும். இல்லாவிட்டால், மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. அழிவை நோக்கி சென்றுவிடும்’’ என்றனர் வருத்தத்துடன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘விலகி இருப்பதாக’ அறிவித்த சசிகலாவின் ஆதரவு மாநகராட்சித் தேர்தலில் யாருக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினரிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற பெயரில் சின்னம்மா (சசிகலா) வெளியிட்டு வரும் அறிக்கைகள் அனைத்தும், அடிமட்டத் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதே... கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னால் அ.தி.மு.க. தோல்வியடைந்துவிடக் கூடாது என்று ஒதுங்கியிருந்தார். இனியும், இதே போல் ஒதுங்கியிருந்தால், தமிழகத்தில் அ.தி.மு.க. இருக்கும் இடத்தில் பி.ஜே.பி. வந்துவிடும். பி.ஜே.பி. வளரதான் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் வழிவகை செய்துவருகிறார்கள்.

எனவே, வரக்கூடிய நகர்ப்புறத் தேர்தலில் உண்மையான அ.தி.மு.க.வினருக்கு சசிகலா ஆதரவளிப்பார் என்று நினைக்கிறோம். இன்றைக்கு அ.ம.மு.க.வில்தான் உண்மையான, அம்மாவின் விசுவாசமுள்ளவர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க.விலும் ‘இரட்டை இலை’ சின்னத்திற்காக சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உள்மனதில் உள்ளதை வெளியில் கொட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். சசிகலாவிற்கு ஆதரவாக பேசியதற்காக எம்.ஜி.ஆர். காலத்து நபரையே (அன்வர் ராஜா) கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். விரைவில் ‘இருவரின்’ ஆட்டத்திற்கும் காலம் பதில் சொல்லும்’’ என்றனர்.

இதையும் படியுங்கள்:- நாக்கு கூசும் அளவிற்கு ஆபாசம்.. கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..வசமாக சிக்கிய பேராசிரியர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உண்மையான அ.தி.மு.க. வினருக்கு சசிகலா ஆதரவளிப்பார் என்பதால், அ.ம.மு.க. வினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். டி.டி.வி. தினகரனும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி களத்தல் இறக்கும் வேளையில் இறங்கியிருக்கிறார்!

click me!