Udayanidhi : திமுக வெற்றிக்கு மனுஷன் எப்படி உழைத்தார் தெரியுமா? உதயநிதி அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை..!

By vinoth kumarFirst Published Dec 19, 2021, 8:33 AM IST
Highlights

பேருந்துகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதன்பேரில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படியில் ஆபத்தான நிலையில் செல்லும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.   

திமுக தேர்தல் வெற்றிக்கு  கடுமையாக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். எனவே அவர் அமைச்சராவதில் எந்த தடையும் இல்லை என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.  அமைச்சரவை மாற்றம் செய்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று தொடந்து பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் சமீபகாலமாக தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மூர்த்தி, கே.என்.நேரு, எம்.எல்.ஏ.க்கள் சிலரும் இந்த கோரிக்கையை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பேச்சுகளை உண்மையாக்கும் வகையில் மூத்த அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திமுக தேர்தல் வெற்றிக்கு  கடுமையாக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். எனவே அவர் அமைச்சராவதில் எந்த தடையும் இல்லை என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பேருந்துகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதன்பேரில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படியில் ஆபத்தான நிலையில் செல்லும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.   

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தினமும் 35 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். புதுச்சேரியில் பேருந்துகள் குறைவு. கேரளாவில் நான்காயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழகத்தில் பேருந்துகள் சிறப்பாக செயல்படுகிறது. பெண்களுக்கு சிறப்பு பேருந்து அல்லது அவர்களுக்கென தனி வண்ணத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார். 

click me!