நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. பாஜகவை கழற்றிவிடுகிறதா அதிமுக..? செல்லூர் ராஜூ கருத்தால் பரபரப்பு..!

By Asianet TamilFirst Published Oct 14, 2021, 10:34 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடத் தயார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
 

அதிமுக பொன்விழா கொண்டாட்டம் அக்டோபர் 17 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க மதுரையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார்.  அப்போது அவர் பேரும்போது, “தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது. தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது. விரைவில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் வர உள்ளது. 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடத் தயார்.  கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி தனித்து போட்டியிட திமுக தயாரா? நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காசு கொடுத்து திமுக வெற்றி பெற்றது. அதுமட்டுலல்ல, எல்லா கட்சிகளையும் துணைக்கு வைத்துக்கொண்டு போட்டியிட்டு திமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றியெல்லாம் வெற்றியே கிடையாது” என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.


அதிமுகவில் அதிரடியாக கருத்து கூறுபவர் செல்லுர் ராஜூ. சில தினங்களுக்கு முன்புகூட அதிமுகவில் மாற்றம் தேவை என்ற பொருளில் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிமுகவும் தனித்து போட்டியிட்டு மோதிப் பார்ப்போமா என்ற சவால் விடுக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தாரா அல்லது பாஜகவை கழற்றிவிட வேண்டும் என்பதற்காக இந்தக் கருத்தை செல்லூர் ராஜூ தெரிவித்தாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 

click me!