பங்களாதேஷ் அரசே இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடு.. ஜிகாதிகளை ஒடுக்கு.. கொந்தளிக்கும் விஷ்வ இந்து பரிஷத்.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 8:48 PM IST
Highlights

அடுத்தடுத்து அங்குள்ள இந்துக்கள் மீது மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது, அங்கு மேலும் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது, இதன் காரணமாக பங்களாதேஷில் உள்ள இந்து சிறுபான்மையினர் சமூகத்தினர் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். 

பங்களாதேஷ் அரசாங்கம் இந்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜிகாதிகளை ஒடுக்க வேண்டும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. பங்களாதேஷில் உள்ள இந்து கோயில்களில் துர்க்கை பூஜை கொண்டாட்டத்தின்போது அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்கள் நடத்திய  தாக்குதலில் இதுவரை 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் இந்துக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பங்களாதேஷ் அரசுக்கு விஸ்வ இந்து பரிசத் வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது க்யூமில்லா நகரம், அங்குள்ள இந்து கோவிலில் துர்கை பூஜை திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அந்தக் கோயில் மீது சில இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் வன்முறை தாக்குதல் நடத்தினர், இந்த வன்முறையில் இதுவரை மூன்று பேர் கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹாஜிகஞ்ச், பன்ஸ்காளி, காக்ஸ் பஜாரில் உள்ள பெகுவா ஆகிய நகரங்களில் இந்து கோவில்களில் தாக்குதல் நடைபெற்றது. கலவரத்தை கட்டுப்படுத்த உள்ளூர் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, பங்களாதேஷ் அதிரடிப்படை, துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகியவை களமிறக்கப்பட்டுள்ளன. இதுவரை வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அனுமார் சிலை மற்றும் இந்து கடவுள்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, இந்த வன்முறைச் செயலுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பங்களாதேஷ் அரசாங்கம் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அங்குள்ள ஜிகாதிகளை ஒழிக்க வேண்டும் என்றும் விஎச்பி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின்  மத்திய பொதுச்செயலாளர் மிலிந்தர் பரண்டே கூறுகையில், பங்களாதேஷ் கோவில்களில் இந்துக்களின் கடவுள் சிலைகள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம், அங்குள்ள ஜிகாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இந்துக்களை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும், இரவு நேரத்தில் கோவில்களுக்குள் நுழைந்து, அங்குள்ள அனுமன் சிலை உள்ளிட்ட இந்து கடவுள்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: ஆளும் கட்சி மட்டும் அல்ல ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைத்தது.. அதிமுகவை டாராக கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்.

ஐகானில் சிட்டகாங் பிரிவின் துர்க்கை பூஜை பந்தலுக்கு வெளியே மிகப் பெரிய வன்முறை நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நடந்த துர்க்கை பூஜை விழா பந்தல்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, வன்முறையில் ஈடுபட்டவர்கள் பூஜை மண்டபங்களில் நுழைந்து, அனைத்து இந்து மத அடையாளங்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த இந்து சமூகமும் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. பங்களாதேஷில் இந்து சிறுபான்மையினர் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வன்முறையில் குறைந்தது 2 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதில் ஈடுபட்ட உள்ளூர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் துர்கா பூஜையில் தாக்குதல் நடக்க அழைப்பு விடுத்ததே காரணமாகும். 

அடுத்தடுத்து அங்குள்ள இந்துக்கள் மீது மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது, அங்கு மேலும் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது, இதன் காரணமாக பங்களாதேஷில் உள்ள இந்து சிறுபான்மையினர் சமூகத்தினர் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். பங்களாதேஷ் அரசாங்கம் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில்  தீவிரவாத ஜிகாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், சிறுபான்மை இந்துக்களின் உயிர் மற்றும் சொத்துக்கள் மற்றும் அவர்களின் மத கலாச்சார நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய அரசு பங்களாதேஷ் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இந்துக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை காக்க ஐக்கிய நாடுகள் சபை தலையிடவேண்டும். 

இதையும் படியுங்கள்: டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 35.47 கோடி ரூபாய் அபராதம்.. தலை சுற்ற வைக்கும் தெற்கு ரயில்வே.

ஆனால் இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் மௌனம் காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது, இந்துக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் போது மட்டும் ஏன் இந்த அமைப்புகள் நடவடிக்கையிலிருந்து இந்து தவறுகின்றன?  இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் வங்கதேசத்தில் நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை அங்குள்ள அரசு உறுதி செய்ய வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத்தும், உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்து சமூகமும், பங்களாதேசில் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ள இந்துக்களுடன் நிற்கிறோம். நாங்கள் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என அவர் உறுதியளித்துள்ளார். 
 

click me!