அதிமுக ஓரிடத்தில்கூட ஜெயிக்காது.. பணத்தை செலவு செய்யாதீங்க ரத்தத்தின் ரத்தங்களே.. போட்டுத்தாக்கும் புகழேந்தி.!

By Asianet TamilFirst Published Jan 27, 2022, 10:09 PM IST
Highlights

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம். அதிமுக நிச்சயமாக ஓர் இடத்தில் கூட  வெற்றி பெறுவது என்பது கடினம்

அதிமுக நிச்சயமாக ஓர் இடத்தில் கூட  வெற்றி பெறுவது என்பது கடினம் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தத்தம் மாவட்டங்களில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுகவினருக்கு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி எச்சரிக்கை செய்துள்ளார். 

ஓசூரில் செய்தியாளர்களை புகழேந்தி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம். அதிமுக நிச்சயமாக ஓர் இடத்தில் கூட  வெற்றி பெறுவது என்பது கடினம்” என்று தெரிவித்தார். மேலும் புகழேந்தி கூறுகையில், “குடியரசு தின நாள் அன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்ததோடு  மட்டுமில்லாமல் திமிராக பேசியதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த அதிகாரி மீது துறை ரீதியான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளேன். ஏற்கனவே பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி என்று குருமூர்த்தியும் பாஜகவின் முன்னணி தலைவர்கள் முன்மொழிந்ததைத்தான்  நயினார் நாகேந்திரன் வழிமொழிந்து இருக்கிறார். எனவே, நயினார் நாகேந்திரன் இப்படித்தான் பேசியாக வேண்டும்.” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

click me!