நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... தேர்தல் வியூகம் குறித்து நாளை அதிமுக ஆலோசனை!!

By Narendran SFirst Published Jan 27, 2022, 8:01 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வியூகம் குறித்து திமுக இன்று ஆலோசித்து வரும் நிலையில் அதிமுக நாளை ஆலோசனை செய்ய உள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வியூகம் குறித்து திமுக இன்று ஆலோசித்து வரும் நிலையில் அதிமுக நாளை ஆலோசனை செய்ய உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு, அதாவது 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

அடுத்த மாதம் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுகள் மீதான பரிசீலனை 5 ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடை நாளாகும். வெற்றி பெற்றவர்கள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி பதவியேற்பார்கள் என அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், மறைமுக தேர்தல் 04.03.2022 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள், வியூகம் மற்றும் பிரசார திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!