அடுத்த 35 நாட்களில் கொரோனா ஆட்டம் குளோஸ்.. ஐஐடி பேராசிரியர் குட் நியூஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2022, 7:48 PM IST
Highlights

ஓமிக்ரானுக்கு முன் 90% மக்கள் ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர், ஆனால் ஒமிக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியையும் கடந்து பலரையும் தாக்கியுள்ளது. எனவே Omicron இலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது உறுதி என்றாலும், அடுத்துவரும் புதிய மாறுபாடு அந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் கடந்து தொற்றுநோயைப் பரப்புமா? இல்லையா என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது.

கான்பூர் ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதிக்குள், அடுத்த 35 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரமாக குறையும் என்றும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், கிட்டத்தட்ட நாடு முழுவதும் நிலைமை முன்பு போலவே இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும். Omicron க்குப் பிறகு ஒரு புதிய மாறுபாடு வரலாம் என்றாலும், அதைப் பற்றி இப்போது எதுவும் கூறுவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்து நாளேடு ஒன்று முன் வைத்த கேள்விகளுக்கும் பேராசிரியர் அகர்வால் விலக்கமாக பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு :- 1.

1.கேள்வி: திங்களன்று, கரோனா பாதிப்பு 16.4% குறைந்துள்ளது. புதிய தொற்றும் குறைவாகவே பதிவாகி உள்ளது. இனி தொற்று எண்ணிக்கை குறையுமா? பதில்: திங்களன்று வரும் புள்ளிவிவரங்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனையின் முடிவு ஆகும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சோதனை மற்ற நாட்களை விட குறைவாக உள்ளது. எனவே, திங்கள்கிழமையின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​​​கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக யூகிப்பது தவறானது. அதனால்தான் 7 நாட்களின் சராசரி மதிப்பின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறோம், நாடு உச்சத்தை எட்டியுள்ளது அல்லது இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அது வந்துவிடும் என்று தெரிகிறது. ஒருநாள் பாதிப்பு 3.47 லட்சத்தை எட்டியுள்ளன. இனியும் உயர வாய்ப்புகள் குறைவுதான்.

2.கேள்வி: 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், கொரோனாவின் புள்ளிவிவரங்களை மறைக்க முயற்சிக்கவில்லையா? புள்ளி விவரங்களை மறைத்து வைத்தால் தெரிந்துவிடும் இதை அறியும் அமைப்புகள் நாட்டில் பல உள்ளன. இப்போது எங்கு தேர்தல் நடக்கப் போகிறதோ, அது நடக்காத பிற மாநிலங்களிலும் இதே மாதிரிதான் காணப்படுகிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில், புள்ளிவிவரங்கள் மறைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை.

3.கேள்வி: இப்போது வந்துள்ள உச்சத்தின் அர்த்தம் என்ன, மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் உச்சம் வருமா? பதில்: நாட்டின் ஒட்டுமொத்த தரவுகளின்படி உச்சநிலையைப் பற்றி பேசுகிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் நிலையும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் கொரோனா உச்சம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவிலும் உயர்ந்து வருகிறது, விரைவில் எம்.பி. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் உயரும். பிப்ரவரியின் முதல்-இரண்டாவது வாரத்தில், உச்ச நிலையை அடையும்.

4.கேள்வி: ஓமிக்ரான் மட்டுமே கொரோனாவை ஒழிக்கும் என்று சொல்லப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலான மக்களுக்கு ஆன்டிபாடிகளைக் உருவாக்கும் என்கிறார்களே? பதில்: ஓமிக்ரானுக்கு முன் 90% மக்கள் ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர், ஆனால் ஒமிக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியையும் கடந்து பலரையும் தாக்கியுள்ளது. எனவே Omicron இலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது உறுதி என்றாலும், அடுத்துவரும் புதிய மாறுபாடு அந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் கடந்து தொற்றுநோயைப் பரப்புமா? இல்லையா என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது.

5.கேள்வி: நாட்டின் நிலைமை எப்போது இயல்பு நிலைக்கு வரும்? பதில்: கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.47 லட்சத்தை எட்டியுள்ளது நிலையில் அது குறையத் தொடங்கியுள்ளது,  இதற்கு மேல் இனி உயர வாய்ப்பே இல்லை. பிப்ரவரி இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறையும் என நினைக்கிறேன். சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் எண்ணிக்கை உயரவோ, குறையவோ செய்யலாம். ஆனால் பிப்ரவரியில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

click me!