உப்புமா, வெண் பொங்கல், கிச்சடி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வகை வகையான காலைச் சிற்றுண்டி.. இதோ மெனு..

By Ezhilarasan BabuFirst Published Jul 27, 2022, 4:40 PM IST
Highlights

அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை சிற்றுண்டியாக என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது...

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, அத்திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றன, அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் சில திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் வரியை குறைக்க வில்லை போன்ற தொடர் குற்றச்சாட்டுகளையும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது ஒருபுறம் உள்ள நிலையில் மாணவர்கள், பெண்கள் மையப்படுத்தி பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வகையில் காலைச் சுற்றி திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே 7ஆம் தேதி 110 வதிகளின் கீழு தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சில முக்கிய திட்டங்களைஅறிவித்தார் அதில் அரசு பள்ளி மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும் என கூறினார்.

இதையும் படியுங்கள்: "முதலமைச்சராக இல்ல ஒரு அப்பாவாக கேட்கிறேன்".. தயவு செய்து கேளுங்க.. உருக்கமாக பேசிய ஸ்டாலின்..

முதற்கட்டமாக தொலைதூர கிராமங்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அது படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 15 மாவட்ட அரசுப் பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில், மிகத் தூய்மையான முறையில்  திட்டம் தொடங்கப்படும் என்றும் விரைவில் திட்டமானது அனைத்து மாவட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  சொன்னா நம்ப மாட்டீங்க.. 2 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழை டவுன்லோட் செய்யலாம்..!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் காலையில் உணவு வழங்கப்பட உள்ளது. இந்த ஆணை வெளியாவதற்கு முன்னர் சென்னையில் மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய தமிழக முதலமைச்சர் மாணவ-மாணவிகள்  காலை உணவை தவிர்க்க கூடாது, கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும், மாணவ மாணவியர் தன்னம்பிக்கையுடன் பயிலவேண்டும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் கல்வி தானாக வரும். பல மாணவர்களிடம் சாப்பிடாதவர்கள்  கையை உயர்த்துங்கள் என கேட்டபோது 4, 5 மாணவர்கள் சாப்பிடவில்லை எனக் கூறினர்.

நான் கூட பள்ளி படிக்கும் போது பேருந்து பிடிப்பதற்காக காலையில் சாப்பிடாமல் சென்றுவிடுவேன், ஆனால் காலையில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது, நான் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சிற்றுண்டி வழங்குவதற்கான ஆணையில் கையொப்பமிட்டு வந்திருக்கிறேன் என்றார். இனி அரசுப் பள்ளிகளில் அன்றாடம் காலை சிற்றுண்டியாக  உணவு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.இதேபோல் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 1, 14 , 095 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் விரைவில் இது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் வருகையை அதிகப்படுத்துவது மாணவ-மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது, வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை அதிகப்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, மாணவ மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது, ரத்தசோகை குறைபாட்டினை நீக்குவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த வகையில் தமிழக அரசு ரவா சேமியா, கோதுமை ரவா,  அரிசி ரவா போன்ற உணவு பொருட்களின் மூலம் உப்புமா, கிச்சடி,  பொங்கல் போன்ற  உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இந்நிலையில் பள்ளி இயங்கும் ஐந்து நாட்களும் திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் காலை சிற்றுண்டியாக வழங்கப்படும் என்ற விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை உப்புமா வகை: ரவா உப்புமா + காய்கறி சாம்பார், சேமியா உப்புமா+  காய்கறி சாம்பார், அரிசி உப்புமா+ காய்கறி சாம்பார்.

செவ்வாய்க்கிழமை கிச்சடி வகை: ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி,
கோதுமை ரவா காய்கறி கிச்சடி.

புதன்கிழமை பொங்கல் வகை: ரவா பொங்கல் +  காய்கறி சாம்பார்,  வெண்பொங்கல் +  காய்கறி சாம்பார்,

வியாழக்கிழமை உப்புமா வகை: சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்,  அரிசி உப்புமா+ காய்கறி சாம்பார், ரவா உப்புமா+ காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா +காய்கறி சாம்பார்,

வெள்ளிக்கிழமை: கிச்சடி உடன் இனிப்பு...ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய் கிழமை உணவு வகைகளுடன்) ரவா கேசரி, சேமியா கேசரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!