ஒரே வாரத்தில் படுகுழிக்குள் விழுந்த திமுக; வெற்றியை உறுதி செய்த அதிமுக..! ஏரியா வாரியான சர்வே முடிவுகள்

By karthikeyan VFirst Published Mar 28, 2021, 6:34 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கடைசி ஒரு வார காலத்தில், மக்கள் மத்தியில் அதிமுகவிற்கான ஆதரவு அதீதமாக வளர்ந்திருப்பதை சர்வே வெளிக்காட்டியுள்ளது.
 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் மட்டுமல்லாது, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் களம் காண்பதால் பல்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் கடும் போட்டி என்னவோ, அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு அமைப்புகளும் மீடியா நிறுவனங்களும் சர்வேயை நடத்திவருகின்றன. ஒவ்வொரு சர்வேயும் வெவ்வேறு விதமான முடிவுகளை தெரிவிக்கின்றன. அந்தவகையில், ”டெமாக்ரசி நெட்வொர்க்” நடத்திய சர்வே, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், பழைய சர்வேயின் ஃபாலோ அப் சர்வே, ஒரே வாரத்தில் அதிமுகவிற்கான ஆதரவு அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

டெமாக்ரசி நெட்வொர்க் நிறுவனம் மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை 80 ஆயிரம் பேரிடம் கருத்துக்களை கேட்டது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள், அதிமுக கூட்டணி 122 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 111 தொகுதிகளிலும், அமமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என தெரிவித்தது. எனவே அதிமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த சர்வே தெரிவித்திருந்தது.

அந்த சர்வே மேற்கொள்ளப்பட்ட அடுத்த ஒரு வாரத்தில் அரசியல் களச்சூழல்கள் மாறியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஆ.ராசாவின் தரம்தாழ்ந்த விமர்சனம் திமுக மீதான மக்களின் அதிருப்தியை சம்பாதித்தது. எனவே அரசியல் களச்சூழல் மாற்றத்தை கருத்தில் கொண்டு, முதல் சர்வேயின் ஃபாலோ அப் சர்வே மார்ச் 20 முதல் மார்ச் 25 வரை நடத்தப்பட்டது.

இந்த சர்வே முடிவுகள், ஒரே வாரத்தில் அதிமுகவிற்கான ஆதரவு எகிறியிருப்பதை காட்டுகிறது. முதல் சர்வே முடிவில் 122 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2வதாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள், அதிமுக கூட்டணி 129 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. திமுக ஏற்கனவே 111 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக சர்வே முடிவு தெரிவித்த நிலையில், 2வது கருத்துக்கணிப்பில் 6 தொகுதிகளை இழந்து 105 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

மண்டல வாரியாக சர்வே முடிவுகள்:  

(குறிப்பு - அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்ட எண் பழைய சர்வே முடிவு)

கொங்கு மண்டலம் (கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்) - அதிமுக: 49(40), திமுக: 19(28) 

தொண்டை நாடு (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை) - அதிமுக: 26(34), திமுக: 32(24)

சோழ நாடு (திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர்) - அதிமுக: 13(20), திமுக: 28(21)

பாண்டிய நாடு (ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி) -  அதிமுக: 32(20), திமுக: 15(26)

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி - அதிமுக: 9(8), திமுக: 11(12)
 

click me!