ஒற்றை தேசம் தேவையில்லை... அதிமுக மாஸ்க் அணிந்து செயல்படுகிறது... சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 28, 2021, 5:55 PM IST
Highlights

மொழிகள்,மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகளின் ஒருங்கிணைப்பு தான் இந்தியா. அனைத்து சித்தாத்தங்களும் ஒன்றிணைந்து தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக இன்று தமிழக வந்துள்ளார். காலையில் வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் ஒரே மோடையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 


பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘தமிழகத்தில் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறோம் அவை 2 அரசியல் கட்சிகள் இடையிலான போராக இருக்கும். இந்த தேர்தல் தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை முறியடிப்பதற்கான தேர்தல். நாம் தமிழ் கலாச்சாரம், தமிழ்மொழி, தமிழ் வரலாறு மீது முழுமையான தாக்குதலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழகம் தான் இந்தியா என்கிறோம், அதேபோல் இந்தியா தான் தமிழகம் எனக்கூறலாம். எந்த ஒருமொழியும் மற்ற மொழியை விட உயர்ந்தது என யாரும் மார்தட்டிகொள்ள முடியாது. இந்த நாட்டிற்கு நாம் அனைவரும் முக்கியமானவர்களாக கருதப்படுகிறோம். 

மொழிகள்,மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகளின் ஒருங்கிணைப்பு தான் இந்தியா. அனைத்து சித்தாத்தங்களும் ஒன்றிணைந்து தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது. அனைத்து மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒற்றை சிந்தனையே இந்தியாவுடையது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இது பழைய அதிமுக கிடையாது. இப்போது இருப்பது அதிமுக போல் முகக்கவசம் அணிந்த கட்சி. அந்த முகமூடியை கழட்டினால் அதற்குள் அதிமுக இல்லை, பாஜக தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். பழைய அதிமுக எப்போதோ இறந்துவிட்டது. புலனாய்வுத்துறை மத்திய அரசின் வசம் இருப்பதால் தான் தவறு செய்த அதிமுக முதல்வர் தலைகுனிய நேரிடுகிறது. 
 

click me!