உத்தரபிரதேசத்தில் கொடூரமாக பரவும் வன்முறை !! இன்று மட்டும் 5 பேர் பலி !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 10:59 PM IST
Highlights

உத்தர பிரதேசம் மாநிலத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறை சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்த, ஹிந்து, சீக்கியர், பார்சி, கிறிஸ்துவர் போன்ற சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, ஜாமியா பல்கலைக்கழக  மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த போலீசார் மாணவர்கள் மீது தாக்கதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் வலுப் பெற்றது. பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நாள்தோறும்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதே போல்  உத்தர பிரதேச மாநிலத்திலும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் 5 பேர் பலியானதாக அம்மாநில போலீஸ் டி.ஜி.பி., ஓ.பி.சிங்  தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் இருவர் பிஜ்னோர் மாவட்டத்தையும் இதர மூன்று பேர் பிரோசாபாத், சம்பல் மற்றும் மீரட் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

click me!