ஜார்கண்ட்டில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் ? எக்சிட் போல் அதிரடி முடிவுகள் !! பிஜேபிக்கு ஷாக் !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 10:24 PM IST
Highlights

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் , கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில்தான், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.

4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர்  வேட்பாளரான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் இருந்தனர். ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பர்கைட் உள்ளிட்ட இரண்டு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

81 தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்றுடன் தேர்தல் முடிவடைந்த பின்னர் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதனிடையே இன்று நடைபெற்ற இறுதி கட்ட தேர்தலுக்கு பின்னர் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப் பட்டு உள்ளது

இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் மை இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி காங்., ஜே.எம்.எம் கூட்டணி 38 முதல் 50 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் மை இந்தியா
பா.ஜ. கூட்டணி : 22-32

காங்., ஜே.எம்.எம். 38-50

ஏ. ஜே.எஸ்.யூ 3-5
மற்றவை 4-7
சி.வோட்டர்

பா.ஜ., கூட்டணி 28-36
காங்., ஜே.எம்.எம். 31-39
ஏ. ஜே.எஸ்.யூ . 3-7
மற்றவை 1-7

click me!