
உத்தரபிரதேச மாநிலத்தில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆர்வமுடன்வாக்களிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் இன்று 6வது கட்டமாக நடந்து வருகிறது. மௌவ், கோரக்பூர், குஷிநகரம், தேவ்ரியா, ஆஸம்கர், பல்லியா உள்பட 7 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில், வேட்பாளர்களாக 635 பேர் போட்டியிடுகின்றனர். 1.72 கோடி வாக்காளர்களில் 94.6 லட்சம் ஆண்கள், 77.84 லட்சம் பெண்கள் உள்ளனர்.
ஆஸம்கர் மக்களவை தொகுதியில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் சமாஜவாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் தீவிர பிரச்சாரத்தால், 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில், அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.