
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா. இவர் பெரியகுளம் நகரமன்ற தலைவராக இருந்தவர்.
கோவில் பூசாரி ஒருவரின் கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மேலும் 4 பேரை வழக்கில் சேர்க்கவேண்டும் என கூறி தமிழக அரசின் வழக்கறிஞர் பி.மோகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஓபிஎஸ் தம்பி ராஜா தொடர்புடைய கோவில் பூசாரி கொலை வழக்கில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை சேர்க்கவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.ரமணா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்னையில் வக்கீல் மோகன் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்தது தவறு.இவருக்கு மனு தாக்கல் செய்ய எந்த அடிப்படையும் இல்லை அரசு தான் மனு தாக்கல் செய்யவேண்டும் என மனுவை தள்ளுபடி செய்தனர்.