உ.பி புல்டோசர் அரசியல்.. தேசத்தின்மனசாட்சியை உலுக்குகிறது.. உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

Published : Jun 15, 2022, 08:04 AM IST
உ.பி புல்டோசர் அரசியல்..  தேசத்தின்மனசாட்சியை உலுக்குகிறது.. உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

சுருக்கம்

உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்கள் வீடுகளை அதிகாரிகள் இடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று 12 முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் ஓய்வு பெற்ற 12 உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சுதர்ஷன் ரெட்டி, கோபால கௌடா, கே.கே.கங்குலி, உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,  முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, முகம்மது அன்வர், சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், ஸ்ரீராம் பன்சு, ஆனந்த் க்ரோவர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தில், “உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிப்பவர்களைக் குறிப்பாக இதில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அளவிலான காவல் துறை அதிகாரிகள், மாநில அதிகாரிகளை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இது நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கொடூரமான ஒடுக்கு முறை ஆகும். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் உத்தரப் பிரதேச மாநில அரசு நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகிறது. சட்டவிரோதமாக போராடுபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980; உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1986-ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேசம் வழிகாட்டியுள்ளது.

இது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டவிரோதமாக துன்புறுத்தவே வழிவகை செய்யும். உத்தரப் பிரதேச காவல்துறை 300-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. காவல் துறையின் காவலில் இருக்கும் இளைஞர்கள் லத்தியால் தாக்கப்படும் வீடியோவும், போராட்டத்தில் ஈடுபடுபர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்படும் வீடியோவும் போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் குறி வைக்கப்பட்டு காவல்துறையால் தாக்கப்படும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. ஆளும் அரசால் கொடுரமான மிருகத்தனமான இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்தல், குடிமக்களுக்கான உரிமைகள் மீதான வன்முறையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையையும் கேலிக்கூத்தாக்குவதாகும்” என்று கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!