வண்டி நம்பரை சொல்லுங்க.. அப்பதான் போட்டோஷாப் வேலையா? இல்லையா சொல்ல முடியும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி!

Published : Jun 15, 2022, 07:34 AM IST
வண்டி நம்பரை சொல்லுங்க.. அப்பதான் போட்டோஷாப் வேலையா? இல்லையா சொல்ல முடியும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி!

சுருக்கம்

ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண்  0052'ஆக இருக்காது என நம்புகிறேன்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா டுவிட்டர் பக்கத்தில் ஒரு வாகனத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, கிறித்தவமயமான TNEB என பதிவிட்டார்.  இந்த பதிவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். 

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்;- ஒருவாகனத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, கிறித்தவமயமான TNEB என பதிவிட்டிருந்தார். எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண்  0052'ஆக இருக்காது என நம்புகிறேன். 

வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும் என பதிவிட்டுள்ளார். போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வரும் பாஜகவினரை விமர்சிக்கும் வகையில், இது வழக்கமான போட்டோஷாப்பா என்பதையும் சொல்ல முடியும் என செந்தில் பாலாஜி கூறியதை திமுகவினர் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!