மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி... ஓ.பி.எஸ் மீது குற்றம்சாட்டும் திமுக எம்.பி..!

Published : Jul 05, 2021, 12:23 PM IST
மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி... ஓ.பி.எஸ் மீது குற்றம்சாட்டும் திமுக எம்.பி..!

சுருக்கம்

அதிமுகவில் இரட்டைத் தலைமை சிக்கல் மீண்டும் தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு பதவியின் மீது உள்ள அக்கறை மக்கள் மீதோ கட்சியின் மீது இல்லை. அதிமுகவில் தற்போது மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வருகிறார்.

ஒன்றிய அரசு என்று கூறுவதை ஓ.பி.எஸ் விமர்சனம் செய்கிறார். காரணம், பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவர் மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கம் தான் என திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, பூங்கா நகரில் உள்ள கட்சி நிர்வாகியின் இல்லத்திற்கு வந்த தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு என்று கூறுவதில் எந்தத் தவறுமில்லை. ஒன்றியம் என்றால் பலரும் சிறுமைத் தனம் என்று பதறுகின்றனர். ஒன்றிய அரசு என்று கூறுவதை ஓ.பி.எஸ் விமர்சனம் செய்கிறார். காரணம், பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவர் மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கம் தான். அதிமுகவில் இரட்டைத் தலைமை சிக்கல் மீண்டும் தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு பதவியின் மீது உள்ள அக்கறை மக்கள் மீதோ கட்சியின் மீது இல்லை. அதிமுகவில் தற்போது மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வருகிறார்.

பெட்ரோல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அப்படி, விமர்சனம் செய்பவர்களுக்கு அரசாங்கமும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. நிதிநிலையும் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் திமுக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. அவை நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வில்லை என்றால், விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். திமுக அரசைப் பொறுத்தவரைத் தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். திமுக அரசின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில் தான் பாஜக நீட் தேர்வு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது" என அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!