மீண்டும் சூடுபிடித்த ‘முரசொலி’ வழக்கு.! நீதிமன்றத்தை நாடிய மத்திய அமைச்சர் அமைச்சர் எல்.முருகன் !!

By Raghupati RFirst Published Apr 24, 2022, 12:40 PM IST
Highlights

பல ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் திமுகவின் முரசொலி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைசர் எல். முருகன் கருத்து தெரிவித்து இருந்தார்.

அவர் பொது வெளியில் தெரிவித்த கருத்து தொடர்பாக முரசொலி அறக்கட்டளை சார்பில் திமுக முக்கிய நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசியதாகவும், முரசொலி குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததற்காக எல்.முருகனைத் தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஆர்.பாரதி அடிக்கடி ஆஜரான நிலையில், எல்.முருகன் ஆஜராகவில்லை. வழக்கு தொடர்ந்தபோது பாஜக மாநில தலைவராக இருந்த அவர், தொடர்ந்து பாஜக சார்பில் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக பல முறை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

வழக்கு தொடர்பாக கடந்த முறை ஆஜராக உத்தரவிட்டு போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை என மத்திய இணையமைச்சர் எல். முருகன் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இன்றும் அமைச்சர் எல்.முருகன் ஆஜராகவில்லை. இதையடுத்து 22ஆம் தேதி அதாவது நேற்று எல்.முருகன் ஆஜராக வேண்டும் என சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அலீசியா உத்தரவிட்டார்.

இதனையடுத்து மே 2ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆஜராக வேண்டும் என எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்,முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !

click me!