நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !

By Raghupati R  |  First Published Apr 24, 2022, 8:30 AM IST

நேற்று இரவு சென்னை வந்தார் அமித்ஷா. அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.


பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவடிக்கு சென்றார். அப்போது வழிநெடுகிலும் தமிழக பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷா வருகையையொட்டி மீனம்பாக்கம் முதல் ஆவடி வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர் ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இன்று காலை ஹெலிகாப்டரில் புதுவை செல்கிறார். 

Tap to resize

Latest Videos

புதுவையில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வரும் அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கிறார்கள். தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்துகிறார். 11 மணிக்கு புதுவையில் மத்திய பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

மதியம் 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். மேலும் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ 70 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 3.45 மணிக்கு புதுவை பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துக் கொண்டு சென்னைக்கு விமானம் மூலம் செல்கிறார்.

அமித்ஷா வருகையையொட்டி, நகரின் பிரதான சாலைகளை சீரமைத்து, பிரமாண்ட அலங்கார வளைவுகள் அமைத்தும், கொடி தோரணங்கள் கட்டியும் புதுச்சேரி நகரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.அமைச்சர் பயணம் மேற்கொள்ளும் பிரதான சாலையில் இணையும் சாலைகள் தடுப்பு கட்டைகள் கட்டி அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அமித்ஷாவை வரவேற்ற பொழுது, அண்ணாமலை கொடுத்த புத்தகம் தற்போது நெட்டிசன்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

திருக்குறள் (குஜராத்தி மொழியில்) , தொல்காப்பியம் (ஹிந்தி மொழியில்) புத்தகங்களை வழங்கினார். நேற்று சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவிற்கு  ஜெயரஞ்சன் எழுதிய Dravidian journey புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதை இரண்டையும் கம்பேர் செய்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அலெர்ட்.. தமிழகத்தில் இன்று மழை அடிச்சு ஊத்தப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

click me!