அரசு பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற சீருடை மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

By manimegalai aFirst Published Oct 3, 2018, 2:39 PM IST
Highlights

நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்

தமிழக அரசு பள்ளிகளில் வரும் ஆண்டு முதல் புதிய சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என்றும், நாளை பள்ளிகள் வழக்கம்போல்
இயங்கும் என்றும் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை, எழும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 3
ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். 9 முதல் பிளஸ் டூ வரையிலான வகுப்பறைகள் டிசம்பர்
இறுதிக்குள் கணினிமயமாக்கப்படும். புதிய சீருடைகளுக்கு முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது என்று கூறினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் சந்திப்பின்போது, அமைச்சர் செங்கோட்டையன், ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,
மாணவிகளுக்கு பச்சை நிறத்திலான சீருடையின் புகைப்படத்தையும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு
பிரவுன் நிறத்திலான சீருடையின் புகைப்படத்தையும் வெளியிட்டார். மேலும், பிளஸ் 1 வகுப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்
நிர்ணயிக்கப்பட்டு, அதை பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என கூறினார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் ஆசிரியர்கள்
நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறினார்.

click me!