சபாநாயகர் பதவிக்கு தனபால் பொருத்தம் இல்லை!! அவசர அவசரமாக அனுமதி கேட்டு கருணாஸ் மனு ...

By sathish kFirst Published Oct 3, 2018, 11:39 AM IST
Highlights

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் 
கோரியுள்ளார். இது தொடர்பாக, சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனுக்கு அவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் 
கோரியுள்ளார். இது தொடர்பாக, சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனுக்கு அவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

 திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், இன்று சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனுக்க மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், சட்டப்பேரவை தனபால் அவர்களை  பதவி நீக்கம் செய்யக்கூடிய தீர்மானத்தை கொண்டுவர விழைகிறேன். அந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தாங்கள் அனுமதிக்க  வேண்டுகிறேன் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவை தலைவராக இருக்க்கூடிய தனபால், ஒருதலைபட்சமாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதாகவும் அவரது நடவடிக்கை இருந்து வருகிறது. இதுபோன்ற செயல்களால் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிப்புக்கு  உள்ளாகிறார்கள். எனவே, அவரை உடனடியாக அந்த பதவி நீக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அடிப்படையில், சட்டமன்ற  விதிகளுக்கு உட்பட்டு 179 என்ற பிரிவின்கீழ் அவரை பதவி நீக்கம் செய்வதற்கும், தீர்மானத்தை கொண்டு வருவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. கருணாஸ் மீது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விளக்கம் கேட்டு கருணாசுக்கு நோட்டீஸ்  அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அது தொடர்பான நோட்டீஸ், கருணாசுக்கு சென்றடையவில்லை என்றும், அது பேரவை தலைவரிடம் இருந்து அனுப்பப்படாத நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கக்கோரி, எம்.எல்.ஏ. கருணாஸ், சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனுக்கு மனு ஒன்றை  கொடுத்துள்ளார்.

click me!