சிகிச்சை குறித்து அரசியல் கட்சிகளின் குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை – எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 07:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
சிகிச்சை குறித்து அரசியல் கட்சிகளின் குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை – எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

சுருக்கம்

Unfounded criticisms of the treatment of political parties - the government issued AIIMS

ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் மருத்தவ குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் இன்று வெளியிட்டார்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே எழுந்தாதால் அதிமுக நிலை குலைந்து போனது. இதையடுத்து ஓ.பி.எஸ்சும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் ஜெ மரணம் குறித்த சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து அப்போலோ மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி சிகிச்சை குறித்து விளக்கமளித்தனர். அப்போது, எய்ம்ஸ் மருத்துவ குழு ஏன் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது.

பின்னர், தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவ குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுகொண்டது. அதன்பின், எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று டெல்லியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில் 5 சிறப்பு மருத்துவர்கள் தங்கள் சிகிச்சை குறித்து அறிக்கையில் விளக்கமளித்துள்ளனர். அந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது :

செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் காரணாமாக மயக்கநிலையில் ஆபுலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர்சத்து குறைவு, நீரிழிவு நோய், ஆஸ்த்துமா காரணமாக ஜெயலலிதா பாதிக்கபட்டிருந்தார்.

அவருக்கு 5 முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.

நரசிம்மன், விஜய சந்திர ரெட்டி, சத்திய மூர்த்தி, சுமணா, மனோகர், ராஜு அன்னிகரி, ராம சுப்பிரமணியன், கிரிநாத், பால் ரமேஷ், சுந்தர், மதன்குமார், பாபு மனோகர், பிரபு, பாஸ்கர், ரவிக்குமார், உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை பொறுத்தவரை டாக்டர் அஞ்சன் ட்ரிக்கா, நிதிஸ் நாயக், நிகில் டாண்டன், தேவகோவ்ரவ், ராஜீவ் நரங் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.

சிகிச்சை குறித்த அரசியல் கட்சிகளின் குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை.

மருத்துவமனியில் இருந்த போது குடும்ப உறுப்பினர்களை ஜெயலலிதா விசாரித்தார்.

ஜெயலலிதா தாக்கப்பட்டதாக கூறும் குற்றசாட்டுகள் தவறானது.

தவறான மருத்துகள் அளிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றசாட்டுக்கு மறுப்பு தெரிவத்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தார்.

டிசம்பர் 4  ல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30  மணிக்கு ஜெயலலிதா உயிர் பிரிந்தது.

இதய செயலிழப்புக்கு பின் மருத்துவர்கள் உடல்நிலையை ஆய்வு செய்தனர்.

இதய செயலிழப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதயம் செயல்படவில்லை என உறுதிபடுத்திய பின் ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர், தம்பிதுரை, சசிகலா உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!