தலைவர் பதவிக்கு அன்ஃபிட்..! அண்ணாமலைக்கு எதிராக டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்..!

By Selva KathirFirst Published Aug 27, 2021, 9:49 AM IST
Highlights

அதாவது எந்த நேரத்தில் தனது பாஜக தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்பதை அண்ணாமலை உணர்ந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் எப்போதும் தான் சாதாரண தொண்டன் என அவர் ட்வீட் போட்டிருக்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

கே.டி.ராகவன் பாலியல் வீடியோ வெளிப்படுத்தாத தாக்கத்தை அண்ணாமலை – மதன் தொடர்புடைய  ஆடியோக்கள் ஏற்படுத்திவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

கே.டி.ராகவன் பாஜக பெண் நிர்வாகியிடம் செல்போன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வீடியோ வெளியான போதே இதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதை ஆசியாநெட் தமிழ் கூறியிருந்தது. அதிலும் அண்ணாமலை நினைத்திருந்தால் இந்த விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் முடித்திருக்கலாம், ஆனால் இந்த வீடியோவை மதன் வெளியிட காரணமாக அண்ணாமலையே இருந்திருக்கலாம் என்று கூறியிருந்தோம். தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் அண்ணாமலை – மதன் ஆடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதிலும் மதன் – அண்ணாமலை ஆடியோவின் போது இரண்டு முக்கிய விஷயங்களை அண்ணாமலை கூறியுள்ளது தெரிகிறது. நீங்கள் இந்த ராகவன் வீடியோவை வெளியிடவில்லை என்றால், எனக்குத் தான் கஷ்டம், நான் ஒவ்வொருவராக சென்று அவர்களை கன்வின்ஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் வீடியோவை வெளியிட்டால் எனக்கு வேலை ரொம்ப ஈஸி, ஒவ்வொருவரையும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து தூக்கி களையெடுத்துவிடுவேன் என்று கூறியிருப்பார் அண்ணாமலை.

அதோடு மட்டும் அல்லாமல் ஒரு இடத்தில் நீங்கள் ஒரு குழுவை வைத்து விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று மதன் பார்ட்னர் கீதா வெண்பையன் கூற அது குறித்தும் அண்ணாமலை கேட்டுக் கொள்கிறார். ஆனால் கடைசியாக வீடியோக்களை வெளியிடுங்கள் அப்போது தான் அந்த பெண்ணுக்கு உடனடி நீதி கிடைக்கும் என்றும் அண்ணாமலை கரிசனம் காட்டுவது போல் பேசுகிறார். இதன் மூலம் மதன் வசம் இருந்த வீடியோக்கள் அனைத்துமே வெளியாக வேண்டும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருந்திருப்பது தெரியவருகிறது.

அதோடு கட்சி செயல்பாடுகள் குறித்து பேரம் பேசுவது, தனது அறையின் கதவை மாற்றியிருப்பது, மூத்த பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் குறித்த கருத்து என மதனிடம் சில இடங்களில் அண்ணாமலை எல்லை மீறி பேசியிருப்பதும் அந்த ஆடியோவில் இருக்கிறது. அதோடு மட்டும் அல்லாமல், அமித் ஷா உள்ளிட்டோர் பெயரையும் கூட மதனுடனான பேச்சில் அண்ணாமலை பயன்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் அதிலும் கட்சியில் அண்மையில் இணைந்த ஒருவரிடம் அண்ணாமலை இந்த அளவிற்கு விளக்கமாக பேசியிருக்க வேண்டிய தேவை என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அதோடு ராகவன் தொடர்பான வீடியோ வந்த போதே கட்சித் தலைமையில் அவர் கொண்டு செல்லாததும் அவரது நம்பகத் தன்மையை சீர்குலைத்துள்ளது. மேலும் 15பேரின் வீடியோக்களை மதன் வைத்திருப்பது தெரிந்தும் இந்த விஷயத்தில் அண்ணாமலை அசால்ட்டாக இருந்திருப்பதும் அவர் உண்மையிலேயே தலைவர் பதவிக்கு தகுதியானவர் தானா என்கிற கேள்விகளையும் எழுப்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக நிலவரங்களை கவனிக்கும் சீனியர் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் உடனடியாக அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகள் பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டு போல் உள்ளதாகவும், ஹை பிரியாரிட்டி கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை அவர் மனம் போன போக்கில் பெரிதாக்கிவிட்டிருக்கிறார் என்றும் அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இது தவிர, கடந்த 20 வருட காலமாக தமிழக பாஜக நிர்வாகிகள் மீது பொதுமக்களுக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டதே இல்லை என்றும், தமிழக பாஜக நிர்வாகிகள் மீதான மக்களின் பார்வையே மாற மதன் வீடியோ விவகாரம் காரணமாகிவிட்டதாகவும், அதற்கு பொறுப்பு அண்ணாமலை தான் என்றும் அந்த சீனியர் ஆர்எஸ்எஸ் தலைவர் தனது ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாகவும், இதன் அடிப்படையில் அண்ணாமலையிடம் பாஜக மேலிடம் பதில் கேட்டுள்ளதாகவும். இதன் பிறகே பாஜகவில் தான் எப்போதும் ஒரு சாமான்ய தொண்டன் என்று அண்ணாமலை ட்விட் செய்ததாகவும் சொல்கிறார்கள். அதாவது எந்த நேரத்தில் தனது பாஜக தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்பதை அண்ணாமலை உணர்ந்து வைத்திருப்பதாகவும் அதனால் தான் எப்போதும் தான் சாதாரண தொண்டன் என அவர் ட்வீட் போட்டிருக்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

click me!