மதன் டைரி என்கிற பெயரில் தான் நடத்தி வந்த யூடியூப் சேனலில் தான் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டிருந்தார் மதன். வெளியான சில மணி நேரங்களிலேயே வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களை கடந்து அந்த சேனலும் மேலும் பிரபலமானது. இதுநாள் வரை மதனை வசை பாடி வந்த பெரியாரிய, இடதுசாரி மற்றும் இஸ்லாமிய இயக்களை சேர்ந்தவர்களும் மதன் சேனலுக்கு சப்ஸ்கிரைபர் ஆகிக் கொண்டிருந்தனர்.
கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ வெளியான போதே மதன் பாஜகவில் இருந்து நீக்கப்படுவது உறுதி என்று தெரிந்துவிட்டது, ஆனால் அவரது யூடியூப் சேனல் முடக்கப்பட்டது தான் உண்மையில் அவரை துரத்துவது யார் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
மதன் டைரி என்கிற பெயரில் தான் நடத்தி வந்த யூடியூப் சேனலில் தான் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டிருந்தார் மதன். வெளியான சில மணி நேரங்களிலேயே வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களை கடந்து அந்த சேனலும் மேலும் பிரபலமானது. இதுநாள் வரை மதனை வசை பாடி வந்த பெரியாரிய, இடதுசாரி மற்றும் இஸ்லாமிய இயக்களை சேர்ந்தவர்களும் மதன் சேனலுக்கு சப்ஸ்கிரைபர் ஆகிக் கொண்டிருந்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மதன் டைரி யூடியூப் சேனலே முடக்கப்பட்டுவிட்டது.
சர்ச்சைக்குறிய வீடியோவில் பிரச்சனை என்றால் அதனை மட்டும் நீக்கியிருக்கலாம், ஆனால் சேனலே முடக்கப்பட்டது ஏன் என்று தெரியாமல் பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதற்கு காரணம் கே.டி.ராகவன் வீடியோ மட்டும் இல்லை என்கிறார்கள். வீடியோவிற்கு முன்னதாக மதன் சில விஷயங்களை பேசுகிறார். அதில் இதே போல் தன்னிடம் மேலும் 15 பேரின் வீடியோக்களும் உள்ளதாகவும், அதனையும் விரைவில் வெளியிட உள்ளதாகவும் மதன் கூறியிருந்தார். இந்த கூற்று தான் அவரது சேனலுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.
அதாவது ஒரு பிளாக்மெயிலர் போல மதன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோவை மதன் அந்த 15பேரை பிளாக் மெயில் செய்ய கூட பயன்படுத்தலாம் என்கிற புகாரில் தான் வீடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கியதோடு, இது கடுமையான குற்றச்சாட்டு என்பதால் அந்த சேனலையும் முடக்கியுள்ளது. மேலும் இது சாதாரண ரிப்போர்ட் மூலம் நடந்திருக்காது என்றும் இந்திய அளவில் அதிகாரம் கொண்ட நபர்களால் மட்டுமே உடனடி நடவடிக்கைக்கு சாத்தியம் இருக்கும் என்றும், எனவே மதன் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கலாம் என்கிறார்கள்.