அய்யய்யோ.. ஆண்களுக்கு ஆபத்து அதிகம்.. இது கொரோனாவை விட கொடூரமானது.. ஒட்டு மொத்த உலகமும் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2021, 9:32 AM IST
Highlights

இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த 1990ஆம் ஆண்டு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பெண்களிடையே 28 சதவீதமாகவும் , ஆண்களிடையே 29 சதவீதமாகவும் பதிவாகிய நிலையில் தற்போது பெண்கள் 32 சதவீதம் பேரும் ஆண்கள் 38 சதவீதம் பேரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் 30 வயதிற்கும் மேல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படக்கூடிய வர்களின் எண்ணிக்கை  இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக  தொற்றா நோய்கள் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.பணி சுமை, குடும்ப சூழல் , நகர்ப்புற வாழ்க்கை என பரபரப்பான சூழலுக்கு  மத்தியில் உலகம் முழுவதும்  30 முதல் 79 வயது கொண்ட நபர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு அதிக அளவில் ஆளாகி வருகின்றனர்.

184 க்கும் மேற்பட்ட நாடுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர் ரத்த அழுத்தம் குறித்த ஆய்வில் 10 கோடி மக்களிடம் மூன்று விதமான பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த 1990ஆம் ஆண்டு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பெண்களிடையே 28 சதவீதமாகவும் , ஆண்களிடையே 29 சதவீதமாகவும் பதிவாகிய நிலையில் தற்போது பெண்கள் 32 சதவீதம் பேரும் ஆண்கள் 38 சதவீதம் பேரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலக அளவில் 30- 79 வயதிற்குட்பட்ட   33.1 கோடி பெண்களும் , 31.7 கோடி ஆண்களும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

அதன்படி 62.6 கோடி பெண்களும் , 65.2 கோடி ஆண்களும் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது கொரோனே அசாதாரண சூழல் நிலவி வரும் சூழலில் இணை நோய் மீதான உயிரிழப்புகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் மீதான பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது உடல் ஆரோக்கியம் மீதான பல்வேறு சவால்களை ஏற்படுத்தி வருகிறது.

 

click me!