பிரிட்டன் எம்பி திருப்பி அனுப்பபட்ட விவகாரம்.! இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் முட்டல்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2020, 10:59 AM IST
Highlights

அரசுத் தரப்பில் முறையான ஆவணங்களை ஆப்ரஹாம்ஸ் வைத்திருக்கவில்லை என்பதாக அவருக்கு விசா மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் இந்திய தூதரகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.  

T.Balamurukan

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பி 'டெப்பி ஆப்ரஹாம்ஸ்' டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இமிக்ரேசன் அதிகாரிகள் தெரிவித்ததால் அவர் துபாய்க்கு திரும்பியுள்ளார்.டெல்லி விமான நிலையத்தில் அவர் இருந்தபோது, அவருக்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து எம்.பி. டெப்பி ஆப்ரஹாம்ஸ் பேசும்போது..,'டெல்லி விமான நிலையத்தில் என்னுடைய விசா நிராகரிக்கப்பட்டது. என்னுடைய விசா கடந்த அக்டோபர் வழங்கப்பட்டது. அது 2020 செப்டம்பர் வரையில் செல்லுபடியாகும். ஆனால் எனது விசா நிராகரிக்கப்பட்டதாக இந்திய இமிக்ரேசன் சொன்னதில் உள்நோக்கம் இருக்கிறது.ஜம்மு காஷ்மீரை பார்வையிடும் பிரிட்டன் எம்.பி.க்கள் குழுவின் தலைவரான அவர், தான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டதாக விமர்சித்திருக்கிறார்.. 
 
click me!