தடுமாறும் மு.க.ஸ்டாலின் டீம்..! குழப்பத்தில் பி.கே. டீம்..! அண்ணா அறிவாலய களேபரம்..!

By Selva KathirFirst Published Feb 18, 2020, 10:44 AM IST
Highlights

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் திமுகவுடன் இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதை அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குமேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை பிரசாந்த் கிஷோர் சென்னை வரவே இல்லை என்கிறார்கள். இதே போல் முதற்கட்டமாக திமுக தலைமை – ஐ பேக் டீம் இடையிலான ஒருங்கிணைப்புக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று ஐ பேக் டீம் கூறி ஒரு வாரம் கடந்த நிலையில் அதற்கான எந்த முயற்சியும் திமுக தரப்பில் இருந்து எடுக்கவில்லை என்கிறார்கள்.

சென்னை அண்ணாநகரில் மிகப்பெரிய அலுவலகத்தை போட்டு பிரசாந்த் கிஷோர் டீம் வேலையை தொடங்கியுள்ள நிலையில் ஸ்டாலின் தரப்பிடம் இருந்து எதிர்பார்த்த முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிற பேச்சுகள் அடிபடத்தொடங்கியுள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் திமுகவுடன் இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளதை அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குமேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை பிரசாந்த் கிஷோர் சென்னை வரவே இல்லை என்கிறார்கள். இதே போல் முதற்கட்டமாக திமுக தலைமை – ஐ பேக் டீம் இடையிலான ஒருங்கிணைப்புக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று ஐ பேக் டீம் கூறி ஒரு வாரம் கடந்த நிலையில் அதற்கான எந்த முயற்சியும் திமுக தரப்பில் இருந்து எடுக்கவில்லை என்கிறார்கள்.

இதற்கு முன்பு பிரசாந்த் கிஷோர் எந்த அரசியல் கட்சியுடன் இணைந்து செயல்பட்ட போதும் அது பெரிய அளவில் விமர்சனம் செய்யப்படவில்லை. விமர்சனத்திற்கும் ஆளாகவில்லை. ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. ஐ பேக் டீமை தேர்தல் வியூகத்திற்கு மட்டுமே திமுக ஒப்பந்த் செய்துள்ளது. ஆனால் திமுகவை இனி நடத்தப்போவதாக பிரசாந்த் கிஷோர் தான் என்று பேச்சுகள்அடிபட ஆரம்பித்துள்ளனர். இதனை திமுகவின் முக்கிய நிர்வாகிகளே உண்மை என்று நினைத்து குழம்பிப்போய் உள்ளது தான் இதில் உச்சகட்டம்.

பிரசாந்த் கிஷோருடனான இணைப்பை பெரிய அளவில் ஊடகங்கள் விவாதப் பொருள் ஆக்காது என்றே ஸ்டாலின் தரப்பு நினைத்துள்ளது. ஆனால் திமுகவில் தற்போது ஸ்டாலினுக்கு நிகரான அதிகாரம் கொண்டவர் பிரசாந்த் கிஷோர் என்கிற ரீதியில் வெளியாகும் தகவல் திமுகவை யோசிக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். வெறும் பிரச்சார யுக்திக்கு மட்டும் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்துவதா அல்லது தேர்தல் பணிகள் அதாவது கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வில் அவர்களை பயன்படுத்துவதா என்கிற குழப்பம் திமுக மேலிடத்தை ஆட்டிப்படைப்பதாக சொல்கிறார்கள்.

கடந்த ஒரு வார காலமாக இரவு பகலாக ஸ்டாலின் வீட்டில் இதைப்பற்றியே தான் விவாதம் நடப்பதாக சொல்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் டீம் திமுகவின் தேர்தல் தொகுதிப் பங்கீடு வரைவு மற்றும் வரைவு வேட்பாளர் பட்டியலை ஜுன் மாதத்திற்குள் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். அதாவது ஜுன் மாதத்திற்குள் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடை முடித்து வேட்பாளர் பட்டியலை கேட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் வேட்பாளர்களின் பேக்கிரவுண்டை பிகே டீம் செக் செய்வதற்கு என்று கூறுகிறார்கள்.

இப்படி பிரசாந்த் கிஷோர் டீம் அதிரடியான செயல்களில் இறங்க அவர்களுக்கு ஈடுகொடுக்க திமுகவில் யாரும் இல்லை என்கிறார்கள். மேலும் அனைத்து விஷயங்களும் பென்டிங்கில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஐ பேக் – திமுக மேலிடம் இடையே ஒருங்கிணைப்பு டீம் உருவாக்கப்படாதது குழப்பத்தை அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். அதே சமயம் ஸ்டாலின் – பிரசாந்த் கிஷோர் கூட தொடர்ந்து பேசிக் கொள்வதில்லை, சபரீசனுடன் தான் பிரசாந்த் கிஷோர் டச்சில் இருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது.

இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பிகே டீமும், என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் ஸ்டாலின் தரப்பும் ஆழ்ந்த யோசனையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

click me!