ஸ்டாலினின் வலதுகரமாகும் கே.என்.நேரு..! சட்டப்பேரவை வளாகத்திலும் முன்னுக்கு வந்த பின்னணி..!

By Selva KathirFirst Published Feb 18, 2020, 10:38 AM IST
Highlights

கலைஞர் தனக்கு நெருக்கமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று பேரை வைத்திருப்பார். எப்போதும் அவர்களுடன் தான் தனது பொழுதை கழித்து வருவார். அவர்களில் பேராசிரியர் அன்பழகனும் ஒருவராக இருந்து வந்தார். ஆனால் பொதுச் செயலாளர் பதவியை அன்பழகன் பெற்ற பிறகு அவருடன் டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணத்துவங்கினார் கலைஞர். அதே சமயம் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் கலைஞரின் நிழல்களாக உருவெடுத்தனர்.

திமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்தாலும் திமுகவின் தலைமை தொடர்பான செயல்பாடுகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த கே.என்.நேரு தற்போது ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகியுள்ளார்.

கலைஞர் தனக்கு நெருக்கமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று பேரை வைத்திருப்பார். எப்போதும் அவர்களுடன் தான் தனது பொழுதை கழித்து வருவார். அவர்களில் பேராசிரியர் அன்பழகனும் ஒருவராக இருந்து வந்தார். ஆனால் பொதுச் செயலாளர் பதவியை அன்பழகன் பெற்ற பிறகு அவருடன் டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணத்துவங்கினார் கலைஞர். அதே சமயம் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் கலைஞரின் நிழல்களாக உருவெடுத்தனர்.

பிறகு திமுகவின் அடுத்த கட்ட தலைமுறையாக இருந்த பொன்முடி கலைஞருக்கு நெருக்கமானார். விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்தாலும் கலைஞருடன் பொன்முடியை அதிகம் காண முடியும். இதே போல் பெரம்பலூர் ஆ.ராசாவும் கலைஞருக்கு முக்கியமான தளபதிகளில் ஒருவரானார். அதே சமயம் ஸ்டாலின் தனக்கு என்று அவ்வப்போது நெருக்கமான ஒருவரை வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களிலும் அவர்களிடம் இருந்து ஸ்டாலின் ஒதுங்குவதும் வழக்கமாகும். அந்த வகையில் ஸ்டாலினுடன் அதிகம் நெருக்கம் காட்டியவர்கள் சென்னையை சேர்ந்த திமுக நிர்வாகிகளாகவே இருப்பார்கள்.

ஹசன் முகமது ஜின்னா, மா சுப்ரமணியம் போன்றோர் ஸ்டாலினுடன் ஒரு காலத்தில் எப்போதும் இருப்பவர்கள். இந்த நெருக்கம் தான் மா.சுப்ரமணியத்தை சென்னை மேயராக்கியது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஸ்டாலினுடன் மா. சுப்ரமணியத்தை பார்க்க முடிவதில்லை. இதே போல் ஹசன் முகமது ஜின்னா ஒரு காலத்தில் ஸ்டாலினுக்கு நிழல் போல் இருந்தவர் ஆனால் தற்போது அவர் உதயநிதியுடன் நெருக்கமாகிவிட்டார். இதே கால கட்டத்தில் பொன்முடி, எவ வேலு, சேகர் பாபு போன்றோர் ஸ்டாலினுக்கு நெருக்கம் ஆனார்கள்.

கலைஞர் மறைவுக்கு பிறகு ஆ.ராசா மற்றும் டி.ஆர்.பாலுவும் ஸ்டாலினுடன் எப்போதும் இருப்பவர்கள் ஆனார்கள். இந்த நெருக்கத்தில் டி.ஆர் பாலு மீண்டும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை பெற்றார். திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவியும் தேடி வந்தது. இதே நேரத்தில் திடீர் திருப்பமாக திருச்சி திமுகவின் அடையாளமாக இருந்த கே.என்.நேருவை தலைமை கழக அரசியலுக்கு அழைத்து வந்துஅவருக்கு தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

டி.ஆர்.பாலுவுக்கு பதிலாக கே.என்.நேருவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு தற்காலிகமானது தான் பாலுவுக்கு அதிர்ச்சி அளிக்க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால் உண்மை அதுவல்ல, சென்னை வந்த பிறகு கே.என்.நேருவை தனது வலதுகரமாக ஸ்டாலின் மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். வீட்டில் இருந்து புறப்படும் முன்பு கே.என்.நேரு வந்து சேர்ந்துவிட்டதை உறுதி செய்த பிறகே ஸ்டாலின் வாகனம் புறப்படுவதாக சொல்கிறார்கள்.

இதே போல் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பொழுது அவருடன் கே.என்.நேரு இருக்கிறாராம். ஆர்காடு வீரசாமி – கலைஞர் நட்பு போல் கே.என்.நேரு – ஸ்டாலின் நட்பு இருப்பதாக கட்சிக்காரர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் கட்சி தொடர்பாக மிக முக்கிய டீலிங்குகள் அனைத்தும் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. மேலும் திமுக தலைமை நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கே.என்.நேருவுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.

முன்பெல்லாம் சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு செய்யும் போது ஸ்டாலின் அருகே நிற்க போட்டி நடைபெறும். பொன்முடியும் – ஜெ அன்பழகனும் இதற்காக ஸ்டாலின் முன்னிலையிலேயே வாக்குவாதம் செய்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்று. ஆனால தற்போதைய கூட்டத் தொடரில் ஸ்டாலின் எழுந்து வெளியே நடக்கும் போது கே.என்.நேரு பின்தொடர அவருக்கு வழிவிட்டு மற்ற நிர்வாகிகள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பின் போது கே.என்.நேருவுக்கு ஸ்டாலினுக்கு அருகே தானாகவே இடம் கொடுத்துவிடுகிறார்கள். இதன் மூலம் திமுகவின் உயர்மட்ட தலைவர்களில் முக்கியமானவராக கே.என்.நேரு  வளர்ந்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.

click me!