அமெரிக்க அதிபர் வருகை ,இந்தியாவின் அடிமை தனத்தை குறிப்பதாக சிவசேனா குற்றச்சாட்டு.!!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2020, 9:27 AM IST
Highlights

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது, இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. 

T.Balamurugan

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டுட்ரம்ப்  அரசு பயணமாக இந்தியா வருகிறார். இரண்டு நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் டிரம்ப் பயணிக்கும் வழிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு சுவரை மாநகராட்சி கட்டி வருகிறது. டிரம்ப் வருகைக்காக குஜராத் அரசு செய்து வருகிறது.இந்தியர்களின் அடிமை நிலையை காட்டுவதாக சிவசேனா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.


சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான நாளேடான சாம்னாவில் கண்டித்திருக்கிறது.அதில்..,'
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது, இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. டிரம்பின் இந்திய வருகை பேரரசரின் வருகை போல இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் இங்கிலாந்து அரசர் அல்லது ராணி, இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதை போன்றே இருக்கிறது.

ஆஹமதாபாத்தில் இவ்வளவு நீளமான சுவரை எழுப்ப நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்பட்டதா? நாடு முழுவதும் இவ்வாறு சுவர் எழுப்ப அமெரிக்கா கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா? டிரம்ப், ஆமதாபாத்தில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே இருக்க போவதாக தான் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு கருவூலத்தில் இருந்து ரூ.100 கோடி செலவில் சுவர் கட்டப்படுகிறது. டிரம்பின் வருகையால் அன்னிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை நிறுத்தவோ அல்லது சுவருக்கு பின்னால் இருப்பவர்கள் மேம்படவோ போவதில்லை.டிரம்ப் மிகவும் புத்திசாலி அல்லது உலகம் முழுவதையும் கவனித்துக் கொள்பவர் அல்ல என்று எழுதப்பட்டூள்ளது.

click me!