பேராசிரியர் தாத்தா.. உங்க உழைப்புக்கு நன்றி..! உருகிய உதயநிதி ஸ்டாலின்..!

By Manikandan S R SFirst Published Mar 8, 2020, 4:16 PM IST
Highlights

இனமானம் காக்கக் கழக கொடி பிடித்து, கொள்கை பாடம் நடத்தியவர் எங்கள் இனமான பேராசிரியர் தாத்தா. எங்கள் அறிவாலயத்தின் பேராசிரியரே, உங்கள் இலட்சிய பெருவழியில் கொள்கை பேரன்களாக நாங்கள் என்றும் பயணிப்போம். உங்கள் பெரும் உழைப்புக்கு நன்றி தாத்தா

திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கவலைக்கிடமாக இருந்த அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரும் கடும் சோகத்தில் இருக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பழகனின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை 6 மணியளவில் வேலாங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இனமானம் காக்கக் கழக கொடி பிடித்து, கொள்கை பாடம் நடத்தியவர் எங்கள் இனமான பேராசிரியர் தாத்தா. எங்கள் அறிவாலயத்தின் பேராசிரியரே, உங்கள் இலட்சிய பெருவழியில் கொள்கை பேரன்களாக நாங்கள் என்றும் பயணிப்போம். உங்கள் பெரும் உழைப்புக்கு நன்றி தாத்தா. pic.twitter.com/jg6TYeW3iD

— Udhay (@Udhaystalin)

 

இதனிடையே அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் தாத்தா என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், 'இனமானம் காக்கக் கழக கொடி பிடித்து, கொள்கை பாடம் நடத்தியவர் எங்கள் இனமான பேராசிரியர் தாத்தா. எங்கள் அறிவாலயத்தின் பேராசிரியரே, உங்கள் இலட்சிய பெருவழியில் கொள்கை பேரன்களாக நாங்கள் என்றும் பயணிப்போம். உங்கள் பெரும் உழைப்புக்கு நன்றி தாத்தா' என்று குறிப்பிட்டுள்ளார்.

'பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..!

click me!