
கடந்த சில நாட்களாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி அரசியல் என்றி குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. சினிமாவில் டூயட் பாடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாதிகளுக்கு ஆக்ஷன் வசனத்தை பேச வைக்க ப்ளான் நடந்துகொண்டிருக்கிறது. திமுக போராட்டங்களில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். இதன் முதல்கட்டமாக அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்தார், அடுத்தகட்டமாக பஸ் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
உதயநிதி சினிமாவுக்கு எண்ட்ரி ஆனபோதே அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த ரசிகர் மன்றத் தலைவராக இருந்த அன்பில் மகேஷுக்கு கடந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டு அவர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். என்னதான் தனது நண்பனுக்கு சீட் அங்கிக் கொடுத்தாலும் ‘மன்றத்தில் இருப்பவர்கள் யாரும் கட்சிப் பணிகளில் ஈடுபடவே கூடாது’ என சொல்லியிருக்கிறார் உதய்.
காரணம் என்னன்னா, ‘ இது என் ரசிகர் மன்றம். என் ரசிகர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். திமுக என்ற முத்திரையை தயவுசெய்து மன்றத்தில் குத்த வேண்டாம்’ என்பது தான் அவரது விளக்கம். அவர் சொன்னது போலவே ரசிகர்களும் கட்சிக்காக எந்த வேலையையும் செய்யவில்லை. இப்படி போய் கொண்டிருக்கையில், கனிமொழிக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்க வேண்டும் தளபதிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஸ்டாலின் மனைவி துர்காவுக்கும் தனது மகனை அரசியலில் அடுத்த வாரிசாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் கனவு, ஆசை.
இதுவரை இந்த விஷயத்தை ஸ்டாலினிடம் பேசாமல் இருந்தார் துர்கா. தற்போது மருமகன் சபரீசன் மூலமாக அழுத்தம் கொடுக்கிறாராம். ‘மாப்பிள்ளைக்கும் வயசாகிட்டே போகுது. அரசியல் பின்புலம் இல்லாமல் இருக்கும் கமல், ரஜினி, விஷால் என்று சினிமாக்காரங்க வரும்போது. நம்ம வீட்டுலயும் ஒரு சினிமாக்காரர் அதுவும் அரசியல் குடும்பத்தில் இருந்துகொண்டு நாம் அப்படியே விட்டுவிட முடியுமா? கட்சியில் அவருக்கான முக்கியத்துவத்தை நாமே கொடுப்போம் என சொல்லியிருக்கிறார். இதற்கு ஸ்டாலினும் ஓகே சொல்லிஇருக்கிறாராம். அதன் பிறகுதான் அரசியல் போராட்டத்தில் தொடர்ந்து பேசி வருகிறார் உதய்.
அதுமட்டுமல்ல, உதயநிதியை அரசியலுக்கு இழுக்க மா.சுப்ரமணியன் பங்களிப்பும் அதிகம் என சொல்லப்படுகிறது. உதயநிதியை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஸ்டானிடம் அழுத்தம் கொடுத்து வந்துள்ளாராம். ஸ்டாலின் வசமிருந்த இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு கடந்த ஆண்டு வெள்ளக்கோயில் சாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாமிநாதன் இளைஞர் அணி சார்பில் எந்தப் போராட்டமும் இதுவரை நடத்தவில்லை. அதேபோல கட்சிக் காரர்கள் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வேற சொல்கிறார்களாம். இதனால், அந்த இளைஞர் அணிப் பொறுப்பை உதயநிதிக்கு வழங்க வேண்டும் என்பதுதான் மா.சு.வின் சொல்கிறாராம்.
ஸ்டாலினும் இவ்வளவு நாட்களாக கொஞ்சம் பொறுத்திருந்து செய்யலாம் என அவருக்கு சொல்லிவந்தாராம். இப்போது குடும்பத்திலும் உதயநிதிக்கு ஆதராவாக குரல் எழும்பும் நிலையில் கட்சியிலும் பதவி வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என பேச்சை மும்முரமாக இறங்கியுள்ளாராம் மா.சு. இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, ‘எடுத்ததும் எப்படி இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுப்பது?’ என கேட்டாராம் ஸ்டாலின். அதற்கு மா.சு., ‘இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தம்பிகிட்ட கொடுக்கலாம். அவர் கிட்ட பொறுப்ப ஒப்படைச்சா சிறப்பா செயல்படுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு என சொன்னாராம் மா.சு.... இப்படி அடுத்தடுத்து வரும் அழுத்தத்தால் அவரும் யோசித்து வருகிறாராம். ஒரு பக்கம் குடும்பத்தினரும், இன்னொரு பக்கம் மா.சு.வும் கொடுக்கும் அழுத்தத்தினால், விரைவில் திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படும். அதற்கான வேலைகள்தான் நடக்கிறது. ஆக, தலைவர் தலைமையில் இளைய தளபதிக்கு மூடி சூட்டும் நாள் விரைவில் நடக்குமாம்.
அதே சமயம், உதயநிதிக்கு அரசியல் அனுபவம் இருக்கா? திடீரென அரசியலில் இறக்கிவிட என்ன காரணம்? என கருணாநிதி குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்களாம்.