அத்தையை பக்கத்தில் வைத்து கொண்டு அரசியல் வித்தை காட்டிய உதயநிதி..! அப்பாவை மிஞ்சிய ஸ்டாலின் மகன்..!

Published : Apr 03, 2019, 01:25 PM IST
அத்தையை பக்கத்தில் வைத்து கொண்டு அரசியல் வித்தை காட்டிய உதயநிதி..! அப்பாவை மிஞ்சிய ஸ்டாலின் மகன்..!

சுருக்கம்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸின் தர்மயுத்தம் என்ன ஆனது? ஏன் அவர் வாய் திறக்க மறுக்கிறார் என மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸின் தர்மயுத்தம் என்ன ஆனது? ஏன் அவர் வாய் திறக்க மறுக்கிறார் என மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘’மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக மக்கள் ஏடிஎம் வாசலில் நின்று உயிரிழந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு, 100 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு ஒரு ஆறுதல் கூட சொல்லாதவர்தான் பிரதமர் மோடி. அவர் ஈனமற்றவர், நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து. பெட்ரோல் விலை குறைப்பு என்று நமது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதனை இந்தியாவே உற்று நோக்குகிறது. அதே போல இந்தியாவில் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு 72,000 ரூபாய் வருமானம் கிடைக்கும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்தார். இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்தியாவின் வில்லன் பிரதமர் மோடி. 2 ஆண்டுகள் முதல்வராக இருந்ததே சாதனை என்று முதல்வர் எடப்பாடி கூறுகிறார், ஆண்டுக்கு 35,000போராட்டங்கள் நடந்துள்ளதாக பெருமையாக தெரிவிக்கிறார். இப்படிப்பட்ட மக்கு முதல்வர் நமக்குத் தேவையா? மோடி மற்றும் அவரது அடிமைகளை அகற்றும் போது நம்மால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடியும். தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜக டெபாசிட் கூட வாங்கக் கூடாது. 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸின் தர்மயுத்தம் என்ன ஆனது? ஏன் இன்று அவர் வாய் திறக்க மறுக்கிறார். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று இருந்தவர், இன்று தடுமாற்றம் ஏமாற்றம் சூட்கேஸ் மணி என்று ஆகிவிட்டார்’’ என்று அவர் பேசினார். 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..