தேர்தல் நெருங்க நெருங்க மு.க.ஸ்டாலின் வியூகம்... திமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் மாற்றம்..!

By vinoth kumarFirst Published Apr 3, 2019, 1:16 PM IST
Highlights

பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நகைக்கடன் தள்ளுபடி குறித்த உறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றார்.

பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நகைக்கடன் தள்ளுபடி குறித்த உறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கடந்த மாதம் 19-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் சிறு-குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

 

தேர்தல் அறிக்கை வெளியிட்ட 2 நாட்களுக்கு பின்னர் பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மேலும் இது திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என அக்கட்சி தலைமை அறிவிப்பை வெளியட்டது. இந்நிலையில் திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் வேலூர் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது. பணம் பறிமுதல் காட்டி ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தல்களை நிறுத்த முயற்சி நடைபெறுகிறது என குற்றம்சாட்டினார். 18 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். 

மேலும் அவர் பேசுகையில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.

click me!