மத்திய அமைச்சராக இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒண்ணுதான்... பொன்னாரை தெறிக்கவிட்ட பறக்கும் படையினர்..!

By vinoth kumarFirst Published Apr 3, 2019, 12:29 PM IST
Highlights

கன்னியாகுமரியில் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திருவிடைக்கோடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க தனது காரில் நாகர்கோவிலில் இருந்து சென்று கொண்டு இருந்தார். வில்லுக்குறி பாலம் அருகே அவரது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி குழந்தை ராணி நாச்சியார் தலைமையிலான குழுவினர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். உடனே பொன்.ராதாகிருஷ்ணன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வெளியே காத்து நின்றார். 

இதைத்தொடர்ந்து காரில் பணம், பரிசு பொருட்கள் உள்ளனவா? மேலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்று அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் காரை, பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்காக பெறப்பட்ட ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த சோதனை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. காரில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் இல்லாததை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் காரில் ஏறி திருவிடைக்கோடு நோக்கி புறப்பட்டார்.

click me!