கருணாநிதி கண் அசைவின் அர்த்தம்.. அன்பு மாமா சண்முகநாதனை ஓடோடிச் சென்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின்..!

Published : Jun 03, 2021, 10:52 AM IST
கருணாநிதி கண் அசைவின் அர்த்தம்.. அன்பு மாமா சண்முகநாதனை ஓடோடிச் சென்று சந்தித்த  உதயநிதி ஸ்டாலின்..!

சுருக்கம்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக  சண்முகநாதன் பணிபுரிந்து வந்தார். கருணாநிதி செல்லும் இடமெல்லாம் அவரின் நிழல் போல செயல்பட்ட சண்முகநாதன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி உடனடியாக சென்று சண்முகநாதனை சந்தித்து நலம் விசாரித்தார். 

இதுதொடர்பாக திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை  மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி