குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் தெரியுமா..? உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Feb 21, 2023, 9:36 AM IST

திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அறிவிப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 5 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


திமுக தேர்தல் வாக்குறுதி

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பால் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் தற்போது வரை 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பாத்துள்ளனர். ,அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை கூறி விமர்சித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

பேனா நினைவு சின்னத்திற்கு எத்தனை பேர் ஆதரவுனு தெரியுமா.? வெளியான அறிக்கை.! களத்தில் இறங்கும் திமுக அரசு

ஒற்றை செங்கலை காட்டிய உதயநிதி

இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் இது தான் என கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்டியது போல் மீண்டும் உதயநிதி ஒற்றை செங்கலை தூக்கி காண்பித்து கிண்டல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்யை விமர்சித்தார். ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக குற்றம்சாட்டினார்.

உரிமைத்தொகை எப்போது

திமுகவின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார். பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது தான்.  பெண்களுக்கான உரிமைத்தொகை அதிகபட்சமாக 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளாதக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இரு பெண்கள் செருப்பிற்கு பாலிஷ் போட்ட பிரஷ்தான் எடப்பாடியின் மீசை.. அதிமுகவை இறங்கி அடிக்கும் உதயநிதி..!
 

click me!