திருவாரூரில் உதயநிதி... திருப்பரங்குன்றத்தில் அழகிரி!

By sathish kFirst Published Aug 11, 2018, 1:37 PM IST
Highlights

திருவாரூருக்கு மாஸ் என்றி கொடுக்கிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி, அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரி ரீ என்றி கொடுக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு திமுகவினருக்கு ஒரு பேரிழப்பு என்றே கருதப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம், செறிந்த, தமிழ் ஞானம் மிக்க, எண்ணிலடங்கா திறமைகள் கொண்ட அவரின் இடம் தமிழக அரசியல் வரலாற்றில் வேறு யாராலும் ஈடு செய்ய முடியாததாகும். அவரது மறைவிற்கு பிறகு அரசியலில் யார் யாருக்கு எந்த தொகுதி? என்பது குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழும்பி இருக்கிறது.


திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ், உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கருணாநிதியின் திருவாரூர் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள்  இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தல் குறித்து  பேசுகையில் அழகிரியிடம் கலைஞரின் திருவாரூர் தொகுதியை பொறுப்பேற்க்குமாரு சிலர் கேட்டிருக்கின்றனர். கருணாநிதியை இழந்து வருத்தத்தில் இருக்கும் அழகிரி, அப்பாவின் மரணம் நிகழ்ந்து சில தினங்களுக்குள்ளேயே இது போன்ற முடிவுகள் எடுப்பதில் தனக்கு இப்போது விருப்பம் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
 

அதே சமயம் தனக்கு திருவாரூர் தொகுதி மீது அதிக ஈடு பாடு இல்லை என்பதையும் தெரிவித்த அவர், நமக்கு தான் எப்போதும் திருப்பரங்குன்றம் இருக்கிறதே என தன்னுடைய விருப்பத்தை சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால அவரின் இந்த விருப்பத்திற்கு ஸ்டாலின் எந்த பதிலும் இதுவரை கூறியதாக தெரியவில்லை,  பொதுவாக தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்று சொல்வார்கள்.

அதே போல கலைஞரின் திருவாரூர் தொகுதியை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றனர் திமுகவை சேர்ந்த சிலர். அப்படி ஒரு கருத்து நிலவுவதாலேயே, சமீபகாலமாக நடைபெறும் அனைத்து கட்சி நிகழ்வுகளிலும் உதயநிதியும் அவசியம் இடம் பெறுகின்றார். எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. திமுக அரசியலில் இனி  எது  எப்படி நடக்கப்போகிறது என்பது முறையான அறிவிப்பு வரும் போது தான் தெரியும். 

click me!