உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம்..!! ஸ்டாலின் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2020, 12:11 PM IST
Highlights

தேசிய கொடியை அவமதித்த விவகாரத்தில் எஸ்.வி சேகர் போன்றே எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம் என்றும், திமுகவில் குடும்ப அரசியல் நடப்பதை அறிந்து தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் விமர்சனம் செய்துள்ளார்.  

திரு.வி. கல்யாணசுந்தனராரின் 137 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துண்டலம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், பென்ஞ்சமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன். திரு.வி.கவின் 137 வது பிறந்த நாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கொண்டாடப் பட்டதாகவும், மேலும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவும் இன்று கொண்டாடப்பட உள்ளது என்றும், பொன் விழா ஆய்வு மலர் வெளியிட உள்ளதாகவும், கூறினார். 

மேலும் செப்டம்பர் 10ம் தேதிக்குள் அதற்கான பணி நிறைவு பெறும் என்றும் கூறுனார். மற்றும் பிரமலதா கருத்திற்கு பதிலளித்த அவர், இது தே.மு.தி.க வின் உட்கட்சி கருத்து என்றும் இதற்கு தன்னால் பதில் கூற முடியாது என தெரிவித்த அவர், தொண்டர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இதுக்குறித்து கேப்டன் டிசம்பர் மாதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக தமிழகத்தில் குறைந்து வருவதாகவும், 86% நபர்கள் குணமடைந்துள்ளதாகவும், புள்ளி விவரங்களை எதிர்கட்சித்தலைவர்  ஸ்டாலின் போல் பார்க்க கூடாது என்றும், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்பார் எனவும் கூறினார். 

தேசிய கொடியை அவமதித்த விவகாரத்தில் எஸ்.வி சேகர் போன்றே எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உதயநிதி ஸ்டாலின் போலித் தனத்தின் உச்சம் என்றும், இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும் திமுக வில் வாழ்த்து சொல்லவில்லை. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு எனவும், இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாக தான் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் விநாயகர் புகைக்படத்தை பதிவிட்டதாகவும், திமுக குடும்ப அரசியலை கவனித்து இனியாவது தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 
 

click me!