5 மாதங்களாக கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன்... ராமதாஸ் வேதனை..!

Published : Aug 26, 2020, 11:44 AM IST
5 மாதங்களாக கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன்... ராமதாஸ் வேதனை..!

சுருக்கம்

இதையே தான் கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன். மக்கள் அதை பின்பற்றாதது தான் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகும்.

கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன். விதிமுறைகளை மக்கள் பின்பற்றாதது தான் கொரோனா இன்னும் பரவ காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும் கொடுமை காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டு, சமூகநீதி நிலைநிறுத்தப்படும் நாள் எந்நாளோ?

ஊரடங்கை மதிக்காதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்கள் தான்  இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்கு காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது சரியானது தான்.

இதையே தான் கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன். மக்கள் அதை பின்பற்றாதது தான் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகும். இனியாவது மக்கள் முன்னெச்சரிக்கை விதிகளை கடைபிடிக்க வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!