விளையாட்டு மேம்பாட்டிற்காக குஜராத் மாநிலத்திற்க்கு மத்திய அரசு 608கோடி ரூபாய் ஒதுக்கியது, தமிழகத்திற்கு 38 கோடி ரூபாய் மட்டுமே.. ஆனால் ஆசிய போட்டியில் குஜராத்திற்கு ஒரு மெடல்களும் கிடைக்காத நிலையில் தமிழகத்திற்கு 28 பதக்கம் கிடைத்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
நலத்திட்டம் வழங்கும் விழா
,அண்ணா நகர் பகுதியில் உள்ள கிரசன்ட் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு கல்வி உக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான ஊக்கதொகையுடன் புத்தக பைகள் , பெண்களுக்கான தையல் இயந்திரம் , குக்கர், ஐயன் பாக்ஸ், 10 மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் வழங்க பட்டது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மாணவர்கள் பக்கம் இருக்கும் கட்சி திமுக. ஜெயலிதா இருந்த போதும் நீட் உள்ள வரவில்லை. ஆனால் இப்பொழுது நீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்தது யார் என்று உங்களுக்கு தெரியும்.
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு
பாஜகவின் 9 ஆண்டுகள் ஆட்சியில் வாழ்ந்தது ஒரே குடும்பம் எல்லோருக்கும் தெரியும் அது அடானி குடும்பம் தான். 2018ல் 2020க்குள் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று மோடி கூறினார். ஆனால் தற்போது 2048 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று கூறிவருகிறார். ஜெயலலிதா இருந்த பொது "மோடி யா இல்லை இந்த லேடியா" என்று கேட்டார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் அடிமைகள் "மோடி எங்கள் டாடி" என்று கூறினார்கள்.. ஒரே நாடு, ஒரே மொழி ஒரு மதம் ஒரே உணவு என மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல் பட்டு வருகிறது. 2014 முதல் 2023 வரை இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு வரியாக வழங்கிய ரூபாய் 5 லட்சம் கோடி ஆனால் தமிழக அரசுக்கு திரும்ப ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி வெறும் 2 லட்சம் கோடி ரூபாய்.
குஜராத் -0, தமிழகம்- 28
ஆனால் கடந்த 9 ஆண்டு கால இடைவெளியில் மூன்று லட்சம் கோடி மட்டும் வரி கட்டிய உத்திரபிரதேசத்திற்கு இந்த ஒன்றிய அரசு 9 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது இப்படி பட்ட பாகுபாட்டை இந்த ஒன்றிய அரசு பின்பற்றுகிறது. விளையாட்டு மேம்பாட்டிற்காக குஜராத் மாநிலத்திரக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது 608கோடி ரூபாய். தமிழகத்திற்கு விளையாட்டு மேம்பாட்டிற்காக ஒதுக்கிய நிதி 38 கோடி ரூபாய், ஆனால் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குஜராத்தில் இருந்து வாங்கப்பட்ட மெடல்கள் பூஜியம், ஆனால் தமிழகத்திலிருந்து 28 மெடல்கள் பெற்று நம் வீரர்கள் பெருமை சேர்த்துள்ளனர்
தேர்தல் திமுக கூட்டணி வெற்றி
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அதிமுக நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறது. சேர்ந்து வந்தாலும் பாஜக இல்லாமல், அதிமுக தனியாக வந்தாலும் சரி வெல்லப்போவது என்றும் திமுக கட்சி தான் இந்திய கூட்டணி அரசு தான் என உதயநிதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
மகளிர் உரிமை மாநாடு நடத்தும் ஸ்டாலின், கனிமொழியை திமுக தலைவராக்க தயாரா.? ஜெயக்குமார் கேள்வி