கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோள்.
காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை;- திமுக சார்பில் நேற்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடத்தி உள்ளனர். அதில் மகளிர் உரிமை குறித்து பேசியுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு மகளிர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து திமுகவினர் அங்கிருந்த போலீசாரை மிரட்டி உள்ளனர். இப்படி போலீசாரையே மிரட்டும் திமுகவினர் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு எந்த வித தகுதியுமில்லை. சென்னையில் டிசம்பர் 31ம் தேதி நடந்த மகளிர் மாநாட்டில், பெண் போலீசாரிடம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தவறாக நடந்து கொண்டார்கள். இதுதான் இவர்கள் மகளிரிடம் காட்டும் லட்சணம் என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், காங்கிரஸ் தங்களது கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் குறிக்கோளாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஸ்.இளங்கோவன் தெரிவித்த கருத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி விளையாட்டை விளையாட்டை பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தால் தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
ஒற்றை ஆட்சி குறித்து கானல் நீர் போல் ஒரு கனவு கண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயந்து கொள்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்வானதி சீனிவாசன் பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள்.