மகளிர் உரிமை மாநாடு நடத்தும் ஸ்டாலின், கனிமொழியை திமுக தலைவராக்க தயாரா.? ஜெயக்குமார் கேள்வி

By Ajmal Khan  |  First Published Oct 15, 2023, 2:05 PM IST

தமிழகத்தில் பாஜகவுடன் இப்போதும் இல்லை, எப்போதும் கூட்டணி இல்லையென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை உறுதி படுத்தும் வகையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். 
 


அதிமுக சார்பாக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பாக  மகளிர் குழு மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில்  நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகம் முழுவதும் கடை கோடி வரை அனைத்து இடங்களிலும் அதிமுக வலுவாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

தமிழக முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கும் மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், ஏற்கனவே அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை எப்போதும் கூட்டணி இல்லை கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்பது உறுதியென தெரிவித்தார். கூட்டணி கட்சிகளை திமுக இழுத்து கட்டி போட்டு வைத்திருக்கிறது என தெரிவித்தவர், நெல்லிக்காய் மூட்டை போல திமுக கூட்டணி விரைவில் சிதறும் என கூறினார்.  காவேரி விவகாரத்தில் ஆளும் திமுக அரசு தமிழகத்தின் உரிமையை கேட்டு பெறுவதில் தோல்வி அடைந்து உள்ளது.  மகளிர் உரிமை மாநாட்டிற்கு சோனியா காந்தியை அழைத்த ஸ்டாலின் ஏன் காவிரி நீரை அவரிடம் பேசி தமிழகத்திற்கு பெற்று தரவில்லை என குற்றம் சாட்டினார்.  

பொதுமக்கள் வியாபாரிகள் என எந்த தரப்பினருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் குற்றவாளிகளும் திமுகவினரும் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்றும் அதனால் தான் நாளுக்கு நாள் நொடிக்கு நொடி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக தெரிவித்தார். மகளிர் உரிமைக்காக மாநாடு போடும் திமுக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை திமுகவின் தலைவராக நியமிக்க முடியுமா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்

click me!